பாஜக போட்டியிட்டாலும் வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்.!
உலகத்திற்கே பொதுமறை தந்த திருவள்ளுவரின் 133 அடி சிலையை மீறி கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் 134 அடியில் வைப்பது வக்கிரம். மெரினாவில் உள்ள ஜெயலலிதா மட்டும் எம்ஜிஆரின் நினைவிடங்களை பார்ப்பதற்கு வார இறுதி நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
சிறிய தவறு காரணமாக, ஈரோடு கிழக்கு தேர்தல் பணிமனையில் 3 விதமான பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 பூத்களிலும் வாக்காளர் இல்லாமலே திமுகவினர் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் போலியாக தயாரித்துள்ளனர். அதை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். அதேபோல், ரயில்வே காலனியில் உள்ள 180 வாக்குகள் பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாறி சென்றிருந்தாலும் இன்னும் வாக்கு அங்கே வாக்குகள் உள்ளது. இதையும் சரி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
அரசினுடைய நினைவுச் சின்னம் வைப்பதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். அதனால் பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது மீனவர்கள் தான். உலகத்திற்கே பொதுமறை தந்த திருவள்ளுவரின் 133 அடி சிலையை மீறி கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் 134 அடியில் வைப்பது வக்கிரம். மெரினாவில் உள்ள ஜெயலலிதா மட்டும் எம்ஜிஆரின் நினைவிடங்களை பார்ப்பதற்கு வார இறுதி நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். மிகக் குறைந்த அளவிலேயே கருணாநிதியின் நினைவிடத்தை பார்க்க வருகின்றனர். அதைப் பொறுக்க முடியாமலேயே பேனா நினைவுச்சின்ன அமைக்க திமுக முயல்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து சுற்றுச்சூழலை பாதிக்கும் எழுதாத பேனா அவசியமா?? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
அன்று நடைபெற்றது கருத்து கேட்ப கூட்டமாக இல்லாமல் திமுகவின் பொது கூட்டமாக இருந்தது. முழுக்க முழுக்க சமூக விரோதிகளை களம் இறக்கி எதிர்க்கருத்து கூறுபவர்களை பேசவிடாமல் தடுத்ததாக குற்றம்சாட்டினார். கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என்றால் அறிவாலயத்தில் வைத்தால் அது எங்களுக்கு ஓகே தான் என்றார்.
மேலும், ஓபிஎஸ் ஒரு மண்குதிரை. அது கரை சேராது. சிறிய தவறு காரணமாக, ஈரோடு கிழக்கு தேர்தல் பணிமனையில் 3 விதமான பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது. மாநிலத்தை பொருத்தவரை எங்கள் தலைமையில் கூட்டணி தொடர்கிறது. பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக போட்டியிட்டால் தங்களது வேட்பாளர் வாபஸ் என ஓபிஎஸ் கூறிய நிலையில் ஜெயக்குமார் இதுபோன்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.