கிருஷ்ணகிரி கலவரம்... திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!
கிருஷ்ணகிரி கலவரத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி கலவரத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், ஏறு தளுவுதல், எருது விடும் விழா உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் விழாவில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. மாடுப்பிடி வீரர்களும் அங்கு குவிந்தனர். ஆனால் இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழர்களின் கலாச்சார விழாக்களுக்கு ஒவ்வொன்றாக தடை விதிப்பதா..! திமுக அரசை எச்சரிக்கும் அண்ணாமலை
இதனிடையே எருது விடும் விழாவை நடத்த தடை விதிக்கப்பட்டதாக கூறி அதிகாரிகளும், போலீசாரும் அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் நடந்து வரும் கலவரத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக போட்டியிட்டாலும் வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்.!
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், கிருஷ்ணகிரி, சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவிற்கு காரணமேயின்றி அனுமதி மறுத்து, ஹோசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள இந்த விடியா அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி. மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்த நிர்வாக திறமையற்ற விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.