Asianet News TamilAsianet News Tamil

தமிழர்களின் கலாச்சார விழாக்களுக்கு ஒவ்வொன்றாக தடை விதிப்பதா..! திமுக அரசை எச்சரிக்கும் அண்ணாமலை

போராட்டம் நடத்தித்தான் காலாகாலமாக நடந்து வரும் விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிலைக்குப் பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்றும், எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என திமுக அரசை எச்சரிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai has accused the DMK government of banning the cultural festivals of Tamils
Author
First Published Feb 2, 2023, 1:47 PM IST

எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் எருது விடும் விழாவானது நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசத்திரம் பகுதியில் இன்று எருதுவிடும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு ஏராளமான இளைஞர்களும், காளைகளும் போட்டிக்கு தயாராகியிருந்தனர். அப்போது திடீரென இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என கூறி மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டதால் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மறியல் போராட்டத்தை அடுத்து எருது விடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

9 ஆண்டுகாலமாக ஏமாற்றியது போல் தற்போதும் மக்களை ஏமாற்றும் பாஜக..! மோடி அரசுக்கு எதிராக சீறும் சீமான்

 

சாலை மறியலால் பரபரப்பு

இந்த பரபரப்பான சூழ்நிலை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்களில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, எருது விடும் விழாவிற்கு, பொங்கல் தினம் தொடங்கி, பல வாரங்களாக அனுமதி கேட்டும், அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு. அனுமதி கொடுப்பதும், மறுபடியும் தடை செய்வதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பதால் ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், தற்போது, மீண்டும் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது போல, 

Annamalai has accused the DMK government of banning the cultural festivals of Tamils

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை

தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாகத் தடை செய்வதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வரும் முன், எருது விடும் விழா தடை செய்யப்படாது என்று கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் தடை விதிக்க முற்படுகின்றனர். போராட்டம் நடத்தித்தான் காலாகாலமாக நடந்து வரும் விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிலைக்குப் பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்றும், எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை எச்சரிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடிய அண்ணாமலை! பஞ்ச் டயலாக்கெல்லாம் காமெடியாகிறது.! கலாய்க்கும் காயத்ரி ரகுராம்

 

Follow Us:
Download App:
  • android
  • ios