பாஜகவே எங்களுடன் கூட்டணி முறிக்கும் வரை அவர்களுடன் கூட்டணி தொடரும்..! ஓபிஎஸ்

எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு தன்னை அழைக்காததால் டெல்லி கூட்டணிக்கு செல்லவில்லையென கூறினார். 

OPS said that the alliance will continue until the BJP itself breaks the alliance

மணிப்பூர் கலவரம்-மத்திய அரசு தடுக்கனும்

டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இதன் காரணமாக பாஜக, ஓ.பன்னீர் செல்வத்தை கை விட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,

மணிப்பூரில் நிரந்தர அமைதி ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் முழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆதிவாசி பெண்களை தாக்கப்பட்ட சமூக தொடர்பான வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுப்பது மாநில மற்றும் மத்திய அரசின் கடமையாகும். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டத்தில் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக பேசப்படும் என கூறினார். 

OPS said that the alliance will continue until the BJP itself breaks the alliance

பாஜகவே முறித்து கொள்ளும் வரை கூட்டணி தொடரும்

பாஜக கூட்டணி கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக கூட்டணி கட்சி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை அதன் காரணமாக கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு உள்ளபடியே அவர்களாக கூட்டணியை முறித்து கொள்ளும் வரை பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறேன் என தெரிவித்தார்.  தமிழகத்தில் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டியது அவர்களின் கடமை என குறிப்பிட்டார். 

OPS said that the alliance will continue until the BJP itself breaks the alliance

இந்தியா கூட்டணிக்கு வரவேற்பு

அமலாக்கத்துறை சோதனை பயன்படுத்தி பாஜக மக்களுக்கான கடமையை செய்யவிடாமல் தடுப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், முதலமைச்சர் தனது கடமையை சரியாக செய்து வருகிறார் எந்த கடமையை செய்யவிடாமல் தடுத்தார்கள் என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டி இருப்பது நல்ல பெயர் தான், இந்த கூட்டணியை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். ஓ பி ரவீந்திரநாத் எம்பி பதவி பறிப்பு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள்

அண்ணாமலையின் நடைபயணம் நிறைவடையும் போது தமிழகத்தில் மாபெரும் அரசியல் திருப்புமுனை ஏற்படும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios