மூன்றரை லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும்.? தேர்தல் வாக்குறுதியில் 10% கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை-ஓபிஎஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தியுள்ளார்.
 

OPS has insisted that there should be transparency in the TNPSC examination

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க வலிறுத்தி ஓ.பன்னீர் செலவம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 486-ல், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வாக்குறுதியைகூட நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியினை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், வாக்குறுதியில் உள்ள பத்து விழுக்காடு காலிப் பணியிடங்களைக் கூட நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், காலிப்பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

ஆவினை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்க திட்டமா? குறைந்த விலையில் பால் விற்பனை செய்வது எப்படி.? பால்முகவர்

OPS has insisted that there should be transparency in the TNPSC examination

இந்த நிலையில் சென்ற ஆண்டு தொகுதி 2 மற்றும் 2 A பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த நேர்வில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேர் பங்கேற்றனர். இந்த முதல் நிலைத் தேர்வு எழுதிய பத்து இலட்சம் பேரில், ஒரு பதவிக்கு பத்து பேர் வீதம் 5,529 பதவிகளுக்கு, முன்ளிலை மதிப்பெண் பெற்ற கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர்கள் பிரதானத் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து அதற்கான முடிவினையும் வெளியிட்டது. இதன் அடிப்படையில், தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளையும், தாங்கள் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்த மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, தேர்வு முடிவுகளை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிந்தது என்றும், தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு – திருமாவளவன் சூளுரை

OPS has insisted that there should be transparency in the TNPSC examination

தற்போதைய குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளில் மதிப்பெண்களின் விவரம் வெளியிடப்படவில்லை. ஒருவேளை, முதல் நிலைத் தேர்வு என்பதால் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படவில்லையா என்று தெரியவில்லை. இதன் காரணமாக, தங்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் பிரதானத் தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்பதை கண்டறிய முடியாத சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்தத் தேர்வின் மதிப்பெண்கள் தங்களுக்கு ஓர் அடிப்படையாக அமையும் என்றும் தேர்வு எழுதியவர்கள் கருதுகிறார்கள். மதிப்பெண்களை வெளியிடாதது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

மாணவி பிரியா உயிரிழப்பு விவகாரம்..! கடவுளின் விதி என கூறி தப்பிக்க வில்லை..! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த மா.சு
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios