Asianet News TamilAsianet News Tamil

ஆவினை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்க திட்டமா? குறைந்த விலையில் பால் விற்பனை செய்வது எப்படி.? பால்முகவர்

ஒரு லிட்டர் ஆவின் பால் 60.00ரூபாய் எனில் விற்பனை கமிஷன் தொகையை கழித்தால் 58.00ரூபாய் தான் வரும் போது அதை விட குறைவாக லிட்டருக்கு 12.00ரூபாய் அதாவது பழைய விற்பனை விலையான 48.00ரூபாய்க்கே ரிலையன்ஸ் விற்பனை செய்வது என்பது எப்படி சாத்தியமாகும்..?  என  பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Milk agents allege that the Tamil Nadu government is privatizing Aavin company
Author
First Published Nov 16, 2022, 12:44 PM IST

ஆவினை ரிலையன்ஸ்க்கு தாரை வார்ப்பா.?

ஆவின் பால் பாக்கெட் ரிலையன்ஸ் மார்க்கெட்டில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், எனவே ஆவினை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்க திட்டமா என பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருகிறதோ..? என்கிற சந்தேகத்தை கடந்த செப்டம்பர் மாதமே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எழுப்பியிருந்தது.

அந்த சந்தேகம் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உண்மையாகி வருவது போல் தோன்றுகிறது. ஏனெனில் ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களுக்கு நெய் உள்ளிட்ட பால் பொருட்களை ஆவின் நிர்வாகம் சரியாக விநியோகம் செய்யாத நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையை விட ரிலையன்ஸ் மார்ட் கடைகளில் MRP விலையில் இருந்து 30.00ரூபாய் வரை குறைந்த விலைக்கு தட்டுப்பாடின்றி, தாரளமாக கிடைக்கும் வகையில் வழங்கி வருகிறது.

ரூ.1000 போதாது..! மழையால் பாதித்த அனைவருக்கும் ரூ.5000 வழங்கிடுக..! திமுக அரசை வலியுறுத்திய மார்க்சிஸ்ட்

Milk agents allege that the Tamil Nadu government is privatizing Aavin company

ரூ.12 குறைவாக விற்பனை செய்வது எப்படி.?

 இந்த நிலையில் ஒரு லிட்டர் 60.00ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய ஆவின் நிறைகொழுப்பு பாலான ஆரஞ்சு நிற பிரிமியம் பால் பாக்கெட் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரிலையன்ஸ் மார்ட் கடைகளில் தினசரி காலை வகையிலேயே ஒரு லிட்டர் 48.00ரூபாய்க்கு (அரை லிட்டர் 24.00) விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நேற்று முன்தினம் (14.11.2022), நேற்று (15.11.2022) மாலையும் மற்றும் இன்று (16.11.2022) காலையிலும் களத்தில் இறங்கி ஆய்வு செய்ததில் அது உண்மை என தெரிய வந்தது. மாதாந்திர அட்டைதாரர்களை தவிர்த்து லிட்டர் 60.00ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் காலையில் இருந்து மாலை வரை ஒரு லிட்டர் 48.00ரூபாய்க்கு ரிலையன்ஸ் மார்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதும், 

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு – திருமாவளவன் சூளுரை

Milk agents allege that the Tamil Nadu government is privatizing Aavin company

ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஆவின் உறவா.?

பிற்பகலில் மறுநாள் தேதியிட்ட பால் பாக்கெட்டுகள் விற்பனையாவதும் கடும் அதிர்ச்சியளிப்பதோடு தமிழகம் முழுவதும் பால் முகவர்களோடு ஆவின் நிர்வாகம் கொண்டிருக்கும் உறவை முறித்துக் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஒட்டி உறவாடும் பணியை தமிழக அரசு சத்தமின்றி செய்து வருகிறதோ..?  என்கிற அந்த சந்தேகத்தை இந்த நிகழ்வுகள் மேலும் வலுப்படுத்துவதாகவே இருக்கிறது என கூறியுள்ளார்.   ஏற்கனவே பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கான லாபத் தொகை (கமிஷன்) அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் இருந்து லிட்டருக்கு 2.00ரூபாய் வழங்கப்படும் போது ஒரு லிட்டர் 60.00ரூபாய் எனில் விற்பனை கமிஷன் தொகையை கழித்தால் 58.00ரூபாய் தான் வரும் போது அதை விட குறைவாக லிட்டருக்கு 12.00ரூபாய் அதாவது பழைய விற்பனை விலையான 48.00ரூபாய்க்கே ரிலையன்ஸ் விற்பனை செய்வது என்பது எப்படி சாத்தியமாகும்..? 

மாணவி பிரியா உயிரிழப்பு விவகாரம்..! கடவுளின் விதி என கூறி தப்பிக்க வில்லை..! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த மா.சு

Milk agents allege that the Tamil Nadu government is privatizing Aavin company

ஆவின் பாலை புறக்கணிப்போம்

அப்படியானால் பால் முகவர்களையும், சில்லறை வணிகர்களையும் அழிக்க ஆவினும், ரிலையன்ஸ் நிர்வாகமும் சதி செய்கிறதோ..? என்கிற சந்தேகமும் கூடவே எழுகிறது. எனவே தமிழகம் முழுவதும் பால் முகவர்களுக்கு ஒரு விற்பனை விலையும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு விலையும் என வழங்குவதையும், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் தட்டுப்பாடின்றி வழங்கி விட்டு ஆவினின் முதுகெலும்பாக இருக்கும் பால் முகவர்களை வஞ்சிப்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அல்லது விரைவில் எங்களது சங்கத்தின் பொதுக்குழு கூடி ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தமிழகம் முழுவதும் புறக்கணிப்பது தொடர்பாக முடிவெடுக்கும் என்பதை தமிழக அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் தெரிவித்துக் கொள்வதாக  பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சட்டத்திற்கு புறம்பாக தீட்சிதர் செயல்பட்டால் அரசு தனது அதிகாரத்தை செலுத்தும்..! எச்சரிக்கை விடுத்த சேகர்பாபு

Follow Us:
Download App:
  • android
  • ios