தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு – திருமாவளவன் சூளுரை

தமிழ் நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

Thirumavalavan said that the goal is to create a separate Tamil Nadu

வெறுப்பை உமிழ கூடாது- திருமா

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்த திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் எனும் தலைப்பில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர் ஜெ.பாரத் என்பவர் நூல் எழுதியுள்ளார்.இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டார். முன்னதாக, அம்பேத்கர் சட்டக் கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், தமிழ் தேசிய இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்களிப்பு மகத்தானது, பெரிய கட்சிகள் செய்ய முடியாததை சாத்தியப்படுத்தியுள்ளது என கூறிய அவர், தமிழ் தேசியம் என்கிற பெயரில் பிற இனத்தினர் மீது வெறுப்பை உமிழ கூடாது. தமிழ் தேசியம் சாதி ஒழிப்பை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கூறினார்.

ரூ.1000 போதாது..! மழையால் பாதித்த அனைவருக்கும் ரூ.5000 வழங்கிடுக..! திமுக அரசை வலியுறுத்திய மார்க்சிஸ்ட்

Thirumavalavan said that the goal is to create a separate Tamil Nadu

தமிழ் நாடு எனும் தனி நாடு

தமிழ் நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் எனவும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாக தான் மத்திய அரசு இருக்க வேண்டும்  மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும் என கூறினார். அரசியல் என்பது பதவிக்காக,, அதிகாரத்திற்காக பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மிக மிக குறைந்த நபர்கள் தான் கொள்கை கோட்பாடுகள்  குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள், அனைத்து காட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளதாக தெரிவித்தார்.  ஆனால் அப்படிப்பட்டவர்கள் தான் முக்கிய பொறுப்புகள் பெற்று கட்சியை வழி நடத்துவார்கள் என கூறினார்.

ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது.. திராவிட மாடல் அரசை எச்சரிக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியம்.!

Thirumavalavan said that the goal is to create a separate Tamil Nadu

அடங்க மறுப்போம்..?

அடங்க மறுப்போம், அத்து மீறுவோம், திருப்பி அடிப்போம் என்பது கொள்கையா கோட்பாடா என கேள்வி எழுப்பிய திருமாவளவன்  இது ஒரு செயல் திட்டம் என விளக்கம் அளித்தார். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை மூன்றும் தான் உழைக்கும் மக்களுக்கு பகை. சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ,குடும்பம், என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம் என கூறிய அவர், ஒடுக்கப்படுகிற  மக்களுக்கு   நம்பிக்கை அளிக்கும். கொள்கை முழக்கம் தான் அடங்க மறுத்தல், அத்து மீறுதல், திருப்பி அடித்தல் என விளக்கினார்.இது வன்முறை முழக்கம் அல்ல எனவும் வன்முறைக்கு எதிரான முழக்கம் எனவும் கூறினார். 

இதையும் படியுங்கள்
அறநிலையத்துறை பள்ளி,கல்லூரியில் வெண்பொங்கல், இட்லியோடு காலை சிற்றுண்டி.! திட்டத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios