அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !
எடப்பாடி பழனிசாமி தரப்பும் சரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சரி மாறி மாறி ஆதரவாளர்களை நீக்கியும், சேர்த்தும் வருகிறார்கள்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்த நாள் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் இபிஎஸ் பக்கம்தான் இருந்து வருகின்றனர். ஓபிஎஸ் பக்கம் மிக குறைந்த நிர்வாகிகளே இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பும் சரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சரி மாறி மாறி ஆதரவாளர்களை நீக்கியும், சேர்த்தும் வருகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு..திருவள்ளூர் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !
இந்நிலையில் ஓபிஎஸ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளாக வெல்லமண்டி என் நடராஜன், ஆர்டி ராமச்சந்திரன், சி திருமாறன், ஆர்வி பாபு ஆகிய 4 பேர் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மதுரை, திருச்சி, நெல்லை, புதுச்சேரி, விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்தார். இதுபோன்று, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் 3 பேரை நியமித்து அறிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..மக்களே உஷார்.! ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்.. ஆய்வில் வந்த அதிர்ச்சி முடிவுகள் !
இந்த நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளையும் நியமித்து அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மாறி மாறி அறிவித்து வருவதால் அதிமுக தொண்டர்கள் குழப்ப நிலையில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயும் இது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !