Asianet News TamilAsianet News Tamil

மக்களே உஷார்.! ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்.. ஆய்வில் வந்த அதிர்ச்சி முடிவுகள் !

உலகின் பல்வேறு நாடுகளிலும் குரங்கம்மை தொற்று பரவி வருகிறது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The new Monkeypox symptoms found in brazil patients affect men's penis
Author
First Published Jul 26, 2022, 3:00 PM IST

ஆப்ரிக்க நாடுகளில் பரவிய குரங்கம்மை தொற்று, உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உட்பட 75 நாடுகளில் குரங்கம்மை பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு, மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. குரங்கு அம்மை என்பது அரிதான ஒரு வைரஸ் தொற்றாகும். இதனால் லேசான பாதிப்புகளே ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. 

The new Monkeypox symptoms found in brazil patients affect men's penis

மேலும் செய்திகளுக்கு..திருவள்ளூர் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

இந்நிலையில் லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூன் 24 வரை பாதிக்கப்பட்ட 528 நபர்கள வைத்து நடத்திய ஆய்வில், நெருக்கமாக இருப்பவர்களின் மூச்சுக்காற்று மூலமும், ஆடைகள் மூலமும் எளிதாக குரங்கம்மை பரவலாம் என தெரியவந்துள்ளது. 95 சதவீத குரங்கம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் என்று  ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்த தொற்று பாதித்தவர்களில் 98 சதவீத நபர்கள் ஓரினசேக்கையாளர்கள் அல்லது இருபாலின ஆண்கள் எனவும், 75 சதவீத நபர்கள் வெள்ளையர்கள் எனவும் 41 சதவீதம் பேருக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் தொற்று இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களில் அரிப்புடன் 62 சதவீதத்தினருக்கு காய்ச்சலும், 41 சதவீததினருக்கு சோர்வும், 31 சதவீத்தினருக்கு உடல்வலியும், 27 சதவீதத்தினருக்கு தலைவலியும் 56 சதவீதத்தினருக்கு நிணநீர் அழற்சியும் இருப்பது கண்டறியப்பட்டது.

The new Monkeypox symptoms found in brazil patients affect men's penis

இவ்வாறு பரிசோதிக்கப்பட்ட 377 நபர்களில், 109 பேருக்கு தொற்று பாலியல் ரீதியாக பரவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 32 நபர்களை சோதித்ததில், 29 பேருக்கு விந்தணுக்களில் குரங்கம்மை டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது. சைபில்ஸ், ஹேர்ப்ஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்தொற்றுக்களின் அறிகுறிகளை போலவே குரங்கம்மைக்கும் அறிகுறிகள் இருக்கும். வாய் அல்லது ஆசனவாய் பகுதியில் புண்கள் வருவதும் இதன் அறிகுறிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

Follow Us:
Download App:
  • android
  • ios