Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?- ஆளுநருக்கு எதிராக சீறும் காங்கிரஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி அளிக்காத நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். 

One law for AIADMK ministers one law for others Selvaperunthagai has questioned
Author
First Published Jul 18, 2023, 7:43 AM IST

திமுக அமைச்சர்களை குறிவைக்கும் அமலாக்கத்துறை

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக கூறி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை குறிவைத்தது. அனுமதியின்றி அதிகளவு செம்மண் எடுத்ததாக 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை தற்போது பொன்முடி இல்லத்தில் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிற்கு எதிராக செயல்படும் கட்சிகளை பழி வாங்கும் நடவடிக்கை இது என அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. 

One law for AIADMK ministers one law for others Selvaperunthagai has questioned

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கை

இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர்கள் மீது சிபிஐ விசாரணை செய்து கொண்டிருக்கிறது என்று ஆளுநர் அவர்கள் அந்த அமைச்சர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கோப்பு அனுப்பியும், அதற்கு அனுமதியை ஆளுநர் வழங்கவில்லை.  ஆனால், கடந்த 11  ஆண்டுகளுக்கு முன் உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு பொன்முடி அவர்களின் வழக்கு நிலுவையில் இருக்கும் போது,

 

அமலாக்கத்துறை எந்த வகையில் அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது? பா.ஜ.க. கட்சியானது,  இந்திய அரசியலமைப்பை சிதைத்து வருகின்றது என்று சொல்லி வருகிறோம். அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? என்று காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக இந்தக் கேள்வியை கேட்க விரும்புவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை.. ஆனால்.. ட்விஸ்ட் வைத்த அமலாக்கத்துறை..!

Follow Us:
Download App:
  • android
  • ios