நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் விமர்சனம் தேவையற்றது. மேலும், இந்த விவகாரத்தில் ஐநா தலையிட வேண்டும் என்ற அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் கடவுளான நபிகள் நாயகம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து கதார், சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இதனிடையே, பாஜக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இவருடன் சேர்ந்து டெல்லி ஊடக பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டாலும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read this also : யார் இந்த நுபுர் சர்மா?, உலகளவில் கண்டனங்கள் பெரும் இந்தியா! ஏன் தெரியுமா?
இதன் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மதக்கலவரம் வெடித்தது. இதனிடையே பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தையும் அவமதிப்பதையும் ஏற்க முடியாது எனும் பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
OIC அறிக்கை
இதனிடையே 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான ஓஐசி (OIC) இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும் என்று கூறியுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் இந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. உங்கள் நோக்கம் குறுகிதயாக உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.
நபிகள் நாயகத்திற்கு எதிரான சர்ச்சையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக எதிர்க்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
OIC - இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு என்பது 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இஸ்லாமிய நாடுகளிடையே அரசியல், பொருளாதாரம், வணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
Read More..
Naveen Jindal : பாஜக தலைவர்கள் சர்ச்சை பேச்சு: இந்தியப் பொருட்களை புறக்கணிக்க ஓமன் மதகுரு அழைப்பு..!
பாஜகவில் இருந்து நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இடைநீக்கம்... கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை!!
