தமிழ்நாட்டில் திமுக கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? நியூஸ் 18 மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள்..
தமிழகத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றும் என்று நியூஸ் 18 குழுமம் நடத்திய மெகா கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எந்த கட்சி பெறும், அடுத்த பிரதமராக போவது யார் என்று பல்வேறு முன்னணி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன. அந்த வகையில் 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மக்களின் ஆதரவு யாருகு என்ற பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை நியூஸ் 18 குழுமம் நடத்தியது.
அதன்படி தமிழகத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 5 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக 4 இடங்களைப் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை..! வேறொரு பெரிய கட்சியுடன் கூட்டணி பேசுகிறோம்- மன்சூர் அலிகான்
இந்தியா கூட்டணி 51% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு 17% வாக்குகளும் பாஜக கூட்டணி 13% வாக்குகளும், மற்ற கட்சிகளுக்கு 19 % சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன, 2019 தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மொத்தமுள்ள 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்று அமோக வெற்றியைப் பதிவு செய்தது.
ஆனால் 2024 மக்களவை தேர்தலில் திமுக இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தின் அரசியல் களம் கணிசமாக மாற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்: பாஜகவின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு! மீண்டும் தமிழ்நாடுக்கு இடம் இல்லை!
21 முக்கிய மாநிலங்களில் உள்ள 518 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கி, மார்ச் 13 மற்றும் மார்ச் 14 ஆகிய தேதிகளில் ஒளிபரப்பப்படும் நியூஸ்18 நெட்வொர்க் மெகா கருத்துக்கணிப்பில், 95% மக்களவைத் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 1,18,616 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். என்று நியூஸ் 18 குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களின் உணர்வு மற்றும் விருப்பத்தேர்வுகள் பற்றிய விரிவான பகுப்பாய்வை இந்த கருத்துக்கணிப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.