நாடாளுமன்றத் தேர்தல்: பாஜகவின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு! மீண்டும் தமிழ்நாடுக்கு இடம் இல்லை!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர் (ஹமிர்பூர்), நிதின் கட்கரி (நாக்பூர், பியூஷ் கோயல் (மும்பை வடக்கு), பிரஹலாத் ஜோஷி (தார்வாட் தொகுதி) ஆகியோரும் போட்டியிடும் தொகுதிகளும் தெரியவந்துள்ளன.
ராக்கெட் ராணி! அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிக்குக் காரணமான தென்னிந்திய பெண் விஞ்ஞானி!
ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் (கர்ணால்), முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை (ஹவேரி தொகுதி) இருவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியிலும் பாஜக இளைஞரணித் தலைவர் தேஜாஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
முதல் வேட்பாளர் பட்டியலைப் போலவே இந்தப் பட்டியலிலும் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் பாஜக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்கவில்லை என்பதால் வேட்பாளர்களை அறிவிக்க தாமதம் ஆகிறது என்று கூறப்படுகிறது.
மீண்டும் எம்.எல்.ஏ.வான பொன்முடி! உடனே அமைச்சராக்க ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!