மீண்டும் எம்.எல்.ஏ.வான பொன்முடி! உடனே அமைச்சராக்க ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

உச்சநீதிமன்றம் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தள்ளது. இதனால் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ளது.

Ponmudi who is MLA again! Chief Minister Stalin's letter to the governor to make him a minister immediately! sgb

சட்டப்பேரவை செயலகம் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாகத் தொடர்வார் என்று அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

கடந்த 2006 முதல் 2011 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்து, விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.  பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது.

ராக்கெட் ராணி! அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிக்குக் காரணமான தென்னிந்திய பெண் விஞ்ஞானி!

Ponmudi who is MLA again! Chief Minister Stalin's letter to the governor to make him a minister immediately! sgb

இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக பொன்முடி எம்.எல்.ஏ. பதவியையும் அமைச்சர் பதவியையும் பறிகொடுத்தார். அவரது திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டில் திங்கட்கிழமை இடைக்காலத் தீர்வு வழங்கிய உச்சநீதிமன்றம் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தள்ளது. இதனால் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து பொன்முடி மீண்டும் அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார். பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். பொன்முடி மறுபடியும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆளுநர் மனது வைத்தால் பொன்முடியின் பதவியேற்பு நிகழ்வு இன்று இரவேகூட நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பதவியேற்புக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை செய்துவருகிறது.

Jaya Thakur: அரசியல் கட்சிகளை மிரள வைத்த ஜெயா தாகூர்; யார் இவர்? என்ன செய்தார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios