அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை..! வேறொரு பெரிய கட்சியுடன் கூட்டணி பேசுகிறோம்- மன்சூர் அலிகான்

அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டப்படவில்லையென தெரிவித்த மன்சூர் அலிகான்,  இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என கூறியுள்ளார். 

Mansoor Ali Khan has said that there is no division of seats with AIADMK KAK

அதிமுகவுடன் மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக பல்வேறு அரசியல் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று நடிகர் மன்சூர் அலிகான் கட்சியான இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி தரும்படி நடிகர் மன்சூர் அலிகான் கேட்டுக்கொண்டார்.

ஆனால் சீட் கொடுக்க முடியாது எனவும் ஆதரவு தெரிவிக்கும்படி அதிமுக தரப்பில் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்பாக மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை தலைவர் மன்சூரலிகான் தலைமையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர்.

Mansoor Ali Khan has said that there is no division of seats with AIADMK KAK

உடன்பாடு எட்டப்படவில்லை

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவுடன் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.  ஆயினும் இன்னும் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது. அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம். எனவே இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்ன மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: காங்கிரஸ் வாக்குறுதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios