2024 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தான் சூத்திர இந்து பிராமண இந்து என்ற அஸ்திரம் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். 

2024 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தான் சூத்திர இந்து பிராமண இந்து என்ற அஸ்திரம் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழப்பேரரசை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திரைப்படம் திரைக்கு வந்து மக்களால் கொண்டாடப்பட்டு வரும் அதே வேளையில் கடுமையான விமர்சனத்தையும் சம்பாதித்து வருகிறது. சமீபத்தில் இதுகுறித்து பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டது போல இப்போது ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சிகள் நடந்துள்ளநு என அத்திரைப்படத்தை விமர்சித்தார். அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மையம் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில்தான் வெற்றி மாறனுக்கு எதிராக பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி வெற்றிமாறன் மற்றும் கமலஹாசன் , திருமாவளவனை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சீமான் தான் உண்மையான மன நோயாளி..! எப்போதாவது மனநலம் பாதித்து நான் பேசி இருக்கிறேனா.? எச்.ராஜா ஆவேசம்

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சினிமாக்காரர்களால் தான் இளைஞர் சமுதாயம் சீரழிக்கப்படுகிறது. இப்போது ராஜராஜசோழன் இந்து இல்லை என்று சொல்கிற இயக்குனர் தான் கொம்பன் படத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அது கருத்து சுதந்திரம் என கூறினார். 

இதையும் படியுங்கள்: pm narendra modi: கவனமாக இருங்கள்! காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது: பாஜகவினருக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

திரைப்படத்துறையில் காசு போட்டோமா, பணம் சம்பாதித்தோமா என்று இருக்க வேண்டும். வரலாற்றை வரலாறாக பார்ப்பதை விட்டு விட்டு மனம் போன போக்கில் திரித்துபேசி வரலாற்றை அழிக்க கூடாது. தமிழ் சமுதாயத்திற்குள் பகையை மூட்ட கூடாது, போதை மருந்துகளுக்கு அடிமையாவதுபோல சினிமா என்ற மாயையால் தமிழ் இளைஞர்கள் அடிமையாக்கப் படுகிறார்கள் எனக் கூறினார். 

அப்போது சாதிக் கொடுமைகளால் தான் மதமாற்றம் நடந்ததாக கூறுகிறார்களே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், இமானுவேல் சேகரன் கிறிஸ்தவத்தை ஏற்றதற்கு சாதி காரணம் இல்லையா? என எழுப்பப் பட்ட கேள்விக்கு, அதெல்லாம் சும்மா... நம் நாட்டில் வாள் மூலம்தான் மத மாற்றம் நடந்தது. பாபர் காலத்தில் மதம் மாறாதவர்களுக்கு புதிய வரியே போடப்பட்டது என்றார்.

அதேபோல சூத்திர இந்து வேறு, பிராமண இந்து வேறு என திருமாவளவன் கூறிவருகிறாரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு அது ஒன்றும் இல்லை, 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை குறிவைப்பதற்காகதான்நீட் தேர்வு பிரச்சினை கையில் எடுக்கப்பட்டது. ஆனால் அது எடுபடவில்லை, இந்நிலையில்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து சூத்திர இந்து பிராமண இந்து என்ற அஸ்திரத்தை திருமாவளவன் கையில் எடுத்துள்ளார். இவ்வாறு கிருஷ்ணசாமி விமர்சித்தார்.