pm narendra modi: கவனமாக இருங்கள்! காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது: பாஜகவினருக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சி என்னைப் பற்றி பேசாமல் அமைதியாக இருப்பதால் பாஜகவினர் எச்சரிக்கையாக இருங்கள். என்னை அவமதிக்க, அவதூறாகப் பேசுவதற்கு கட்சிக்குள் ஆட்களை வைக்காமல் வெளியாட்களை காங்கிரஸ்கட்சி  நியமித்துள்ளது என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டினார்.

Congress has contracted with someone to abuse me: Prime Minister Modi

குஜராத் மாநிலத்தில் வரும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அதை மீண்டும் தக்கவைக்க போராடி வருகிறது, காங்கிரஸ்கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து செயல்படுகிறார்கள். 

Congress has contracted with someone to abuse me: Prime Minister Modi

தேர்தலையொட்டி குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் 2வதுமுறையாக பயணம் செய்துள்ள பிரதமர் மோடி, பல்லாயிரக்காண கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகிறார். 

இந்நிலையில் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கன்தோர்னா எனும் பகுதியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

காங்கிரஸ் கட்சியிடம் பாஜக தொண்டர்களும், ஆதரவாளர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்னை அவமதிப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்திவிட்டது. கிராமப்புறங்களில் உள்ள வாக்குகளை அமைதியாக சேகரித்து வருகிறது காங்கிரஸ் கட்சி

Congress has contracted with someone to abuse me: Prime Minister Modi

கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்துக்கு எதிராக இருந்து காங்கிரஸ் கட்சி அவதூறு செய்துள்ளது. வாய்ப்புக் கிடைத்தபோது என்னையும் அவமதித்துள்ளார்கள், என்னை பிறர்வாழ்க்கையோடு விளையாடுபவன் என்று என்னை இழிவாகப் பேசினார்கள்.

ஆனால், திடீரென காங்கிரஸ் கட்சி அமைதியாகிவிட்டது. ஆனால், என்னை அவமதிக்கவும், பிரச்சினைகளை உருவாக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும், காங்கிரஸ் கட்சி வெளியாட்களை(ஆம்ஆத்மி கட்சி பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்) நியமித்துள்ளது. சத்தமில்லாமல் கிராமங்களுக்குச் சென்று மக்களின் வாக்குகளை காங்கிரஸார் கோருகிறார்கள்.

எதிர்க்கட்சியின் அமைதியான தந்திரம் குறித்து பாஜக தொண்டர்களுக்கு எச்சரிக்கிறேன். டெல்லியிலிருந்து குஜராத்துக்கு எதிராக இருப்போர், சதி செய்வோர் கட்டுப்படுத்தும் திட்டம் என்று எனக்குத் தெரியும். 

Congress has contracted with someone to abuse me: Prime Minister Modi

குஜராத்தில் சர்தார்படேல் சிலையைக் காண காங்கிரஸ் கட்சியினர் வந்தால் அவர்களிடம், மண்ணின் மைந்தர் சர்தார் படேலை மதிக்காதவர்களுக்கு குஜராத்தில் இடமில்லை என்று மக்கள் தெரிவிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக அரசு செயல்பட்டால் ஒரு கூட்டம் எங்களுக்கு எதிராகப் பேசுகிறது. மக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்கக்கூடாதா

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios