சீமான் தான் உண்மையான மன நோயாளி..! எப்போதாவது மனநலம் பாதித்து நான் பேசி இருக்கிறேனா.? எச்.ராஜா ஆவேசம்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திமுக ஆட்சேபனை சொல்ல ஒரு வரி இருக்கிறது. வயதான காலத்தில் சிறிய பெண்களை கல்யாணம் பண்றவனை நம்ப முடியாது என்று இருக்கிறது. அதற்கு வேண்டுமானால் திராவிடர்கள் ஆட்சேபனை சொல்லலாம் என எச்.ராஜா தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன்-எச்.ராஜா கருத்து
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படமான பொன்னியின் செல்வன் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமான ஓடிக்கொண்டு வருகிறது. இந்த படத்தை தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் திரைப்படத்தை பார்த்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ராஜ ராஜ சோழன் கட்டியது தானே. கல்கியின் பொன்னியின் செல்வனும் , பாலகுமாரன் எழுதிய உடையார், நீலகண்டன் எழுதிய ராஜ ராஜ சோழன் என பார்த்து பார்த்து அவர்கள் எழுதியதில் சினிமாவுக்காக சில மாற்றங்கள் இருந்திருக்கலாம்.
ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் நல்ல முறையில் எடுக்கப்பட்ட படம். ரோஜாவுக்கு பிறகு மணிரத்னம் தேச உணர்வு மிக்க படங்களை எடுக்கவில்லை. ஆனால் இது ஒரு நல்ல முயற்சி. இந்த படம் தமிழர்களுக்கு , தமிழ் சினிமாவிற்கு திருப்பு முனையாக இருக்கும். சாதி ரீதியாக படங்களுக்கு மத்தியில் ட்ரெண்டை மாத்தி நம் மன்னர்கள் பற்றி , நம் சரித்திரம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டதாக கூறினார். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, சில காட்சிகளை மாற்றி தான் ஆக வேண்டும் என்றும் கூறினார்.
மத அடிப்படையில் அமைதியை சீர்குலைக்கும் பிரிவினைவாதிகள்..! ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- கூட்டறிக்கை
,தமிழன் மதம் இல்லாதவனா..?
கி.மு 400 ல் இமாலயத்தில் துவங்கி இந்து மகா சமுத்திரம் வரை இறைவனால் படைக்கப்பட்டது. அதை இந்து ஸ்தானம் என்று சொன்னார்கள். பிராய்லர் கோழி வருவதற்கு முன் அதன் பேர் நாட்டு கோழியா? கோழி தான். ஆகவே இஸ்லாமோ , கிறிஸ்தவமோ வருவதற்கு முன் இந்து மதம் மட்டும் இருந்த காரணத்தால், அதை தர்மம் என்று சொன்னார்கள். அது பழமையானது என்பதால் சனாதன தர்மம். அதனால் அன்றைக்கு இந்து என்று இருந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையென கூறினார். கமல்ஹாசன் பொய் சொல்வதாக சுட்டி காட்டி பேசியவர், அவர் பேசியதை திருப்பி பாருங்கள். இவர்களுக்கு இந்துவும் தெரியாது. எதுவும் தெரியாது. தமிழன் மதம் இல்லாதவன். அப்படி தானே சொல்கிறார்கள் என கூறினார். பொன்னியின் செல்வன் - கல்கி எழுதிய பிரபலமான நாவல். அதை ஒட்டி இந்த கதை வந்துள்ளது. இதில் திமுக ஆட்சேபனை சொல்ல ஒரு வரி இருக்கிறது. வயதான காலத்தில் சிறிய பெண்களை கல்யாணம் பண்றவனை நம்ப முடியாது என்று இருக்கிறது. அதற்கு வேண்டுமானால் திராவிடர்கள் ஆட்சேபனை சொல்லலாம் கேலியாக தெரிவித்தார்.
சீமான் தான் மன நோயாளி
சீமான் தான் உண்மையான மன நோயாளி. அவரை போல் நான் எப்போதாவது மனநலம் பாதித்து பேசி இருக்கிறேனா? அவர் பேசுவதெல்லாம் பிதற்றல். சீமான் தமிழனே இல்லை. மலையாளி. இந்துவும் இல்லை. கிறிஸ்டியன். இதை நான் சொல்லவில்லை. களஞ்சியம் சொல்லி இருக்கிறார். தமிழ் வழி பேசுவதற்கு அருகதை இல்லாதவர் சீமான் என்று விமர்சித்தார். தேர்தலுக்காக கீழ்த்தரமான அரசியலை பாஜக செய்யும் என்று முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு, பாஜக கீழ்த்தரமான அரசியலை எப்போதும் செய்யாது. கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தை படியுங்கள். கீழ்த்தரமானவர்கள் திராவிடர்கள். ஈ.வெ.ரா குறித்தும், கேவலமான சித்தாந்தம் கொண்டவர்கள் திமுகவினர் என கூறினார்.
மரியாதையாக பேசுங்கள்
எச்.ராஜா வீட்டில் வளர்த்த நாய் இறந்து விட்டதாக அவர் போட்ட டுவீட் குறித்த கேள்விக்கு, பதிவு போட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டது என்றும் கோபமாக பேசினார். ராஜாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்து பொய்யாக கேட்க கூடாது. நான் மூத்த அரசியல்வாதி. என்னை துச்சமாக நினைத்து பேசக்கூடாது எனவும், தமிழ்நாட்டில் பெருவாரியான ஊடகங்கள் அறிவாலயத்தின் அடிமைகளாக இருக்கிறார்கள் எனவும் கூறி திடீரென பாதியில் செய்தியாளர்களின் சந்திப்பை முடித்துக்கொண்டு சென்றார். பின்னர் தொடர்ந்து பேசிய ஹெச்.ராஜா, நீங்கள் மரியாதையுடன் பேச வேண்டும். நான் அமைதியாக பேசி கொண்டு இருக்கிறேன் ஒரு அரசியல் தலைவரிடம் நாகரீகமாக பேச கற்றுக் கொள்ளுங்கள் என கூறி செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து கேள்விக்கு பதில் அளித்தார்.
இதையும் படியுங்கள்