அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. சட்டரீதியாக என்ன செய்யலாம்? அவசர ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின்.!

 இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Minister Senthil Balaji arrested.. CM Stalin in urgent consultation.!

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார். 

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது சுமார் 18 மணிநேரம் நீடித்து வந்த நிலையில் நிறைவடைந்தது. இதனையடுத்து, இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க:- அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.!

Minister Senthil Balaji arrested.. CM Stalin in urgent consultation.!

அப்போது, திடீரென அவருக்கு நெஞ்வலி ஏற்பட்டு வலியால் அழுது கதறியுள்ளார். பின்னர், அவரை  ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து தகவலும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க:-  எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் மோடி அரசு.. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

Minister Senthil Balaji arrested.. CM Stalin in urgent consultation.!

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதை சட்ட ரீதியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் அமைச்சர் உதயநிதி, வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் உள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios