அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.!

சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

ED officials arrest Minister Senthilbalaji

18 மணிநேரம் சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரின் சகோதரர் வீடுகள் மற்றும்  உறவினர்கள் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

ED officials arrest Minister Senthilbalaji
அதன் அடிப்படையில் சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது சுமார் 18 மணிநேரம் நீடித்து வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். 

ED officials arrest Minister Senthilbalaji

அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். காரணத்தால் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவதாக கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios