மாநில அரசு அனுப்பும் கோப்புகளை திருப்பி அனுப்புவதையே ஆளுநர் வேலையாகக் கொண்டுள்ளார் - அமைச்சர் குற்றச்சாட்டு

மாநில அரசு அனுப்பும் கோப்புகளை திரும்ப அனுப்புவதையே ஆளுநர் ரவி வழக்கமாகக் கொண்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு குற்றம் சாட்டி உள்ளார்.

minister ev velu slams tn governor rn ravi in thiruvannamalai

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள செங்கம் சாலை சந்திப்பில் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தை புதிதாக இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். பின்னர் மரக்கன்றுகளை நட்டு, கிரிவலப் பாதையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏதுவாக இருசக்கர ரோந்து வாகனங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரகர் டிஐஜி முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளருக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நான்காவது காவல் நிலையமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் ஒப்புதல் உடன் இந்த காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

வாய் பேசமுடியாத குழந்தை உள்பட 3 பேரை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை; கடன் பிரச்சினையால் சிதைந்த குடும்பம் 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள காரணத்தினால் தான் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வருகிறார்கள். திமுக ஆட்சியில் தான் இதுவரை காவல்துறைக்காக மூன்று ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எந்த கோப்புகளை அனுப்பினாலும் திருப்பி அனுப்புவதையே ஆளுநர் வாடிக்கையாக வைத்துள்ளார். சட்டரீதியாக முடிவெடுத்து டி என் பி எஸ் சி க்கு தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

செண்டை மேளம் முழங்க கதகளி நடமாடி ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய மாணவிகள்

மேலும் மாநில அரசும், மத்திய அரசும் திட்டங்களுக்கு ஒன்றிணைந்து செயல்படுவது தான் தமிழக அரசின் நோக்கமாக உள்ளது. தமிழக அரசு அனுப்பும் பல கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாகவும், பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், தமிழக அரசை பொருத்தவரை மாநில உரிமைக்காக எப்பொழுதும் எங்களது கொள்கைகளை மத்திய அரசுக்கு விட்டு தர மாட்டோம். மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆட்சியாக தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios