வாய் பேசமுடியாத குழந்தை உள்பட 3 பேரை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை; கடன் பிரச்சினையால் சிதைந்த குடும்பம்
சேலம் மாவட்டத்தில் கடன் பிரச்சினை காரணமாக தந்தை, மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு திலக் என்ற மகன் இருந்தார். இவருக்கும் திருமணமான நிலையில் மகேஸ்வரி என்ற மனைவியும், ஆறுவயதில் சாய் கிருஷ்ணா என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் திலக் சிறிது காலம் வெளிநாட்டில் வேலை வேலை செய்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊர் திரும்பி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் டிரேடிங் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிகளவு கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பிறந்த சாய் கிருஷ்ணா என்ற குழந்தை வாய் பேச முடியாத நிலையில் குழந்தைக்கு தொடர் மருத்துவ சிகிச்சையும் பார்த்து வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாக திலக் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆளுநர் ரவியை போஸ்மாஸ்டராக்கிய திமுகவினர்; பொள்ளாச்சி நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
இந்த நிலையில் திலக் நேற்று இரவு மேல் மாடியில் இருந்த தனது மனைவி மற்றும் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு கீழ் பகுதியில் இருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கும் விஷம் கொடுத்துவிட்டு மேல் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காலையில் விடிந்து பார்த்தபோது வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கீழ்மாடியில் தந்தை உயிரிழந்த நிலையில் தாய் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார். மேல்மாடி சென்ற போது திலக் தூக்கில் தொங்கியபடி இருந்ததோடு அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் இறந்து கிடந்தனர்.
இதனைத் தொடர்ந்து கன்னங்குறிச்சி காவல்துறையினர் விரைந்து வந்து நான்குபேரின் உடல்களையும் மீட்டதோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த வசந்தாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நான்கு உடல்களையும் கைப்பற்றி காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செண்டை மேளம் முழங்க கதகளி நடமாடி ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய மாணவிகள்
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் திலக் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு ஆன்லைன் டிரேடிங் மூலம் தொழில் செய்ததில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதனை சரிகட்ட அதிக அளவில் கடன் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் தனது ஒரே மகன் வாய் பேச முடியாமல் இருந்த காரணத்தினால் குழந்தைக்காக பல லட்சங்களை செலவு செய்தும் பலன் இல்லாமல் போனதால் விரக்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தான் இறந்தால் தன்னுடைய தந்தை தாய் மனைவி மகன் ஆகியோர் அனாதையாக கூடும் என கருதி அனைவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.