Asianet News TamilAsianet News Tamil

உதயமாகிறது 38-வது புதிய மாவட்டம்...? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி..!

நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் 367 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

Mayiladuthurai New District...Edappadi Palanisamy Announced
Author
Nagapattinam, First Published Mar 7, 2020, 2:49 PM IST

நாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் 367 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

இதையும் படிங்க;- வேட்டியை மடிச்சுகட்டி சேற்றில் இறங்கி நாற்று நட்ட எடப்பாடி... எளிய முதல்வராக விவசாயிகளுடன் கொண்டாட்டம்..! 

Mayiladuthurai New District...Edappadi Palanisamy Announced

பின்னர், விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி;- 11 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நனவாக்க, நாகையில் மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. ஏழை மக்களும் உயர்தர சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், டெல்டா பகுதிகளை பாதுகாக்காப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சாதனை படைத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக 2 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- முதல்முறையாக வெளியே வந்த முயல்குட்டி... பிரசாந்த் கிஷோர் அன்பழகனுக்கு அஞ்சலி..!

Mayiladuthurai New District...Edappadi Palanisamy Announced

டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி இல்லை. மிக முக்கியமாக நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து, அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். நாகையில் புதிய துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios