மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு திமுக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த ஒருவாரமாக உடல்நிலை மோசமடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள க.அன்பழகனின் வீட்டில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது உடலுக்கு திமுக தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்நற்த முக்கிய நிர்வாகிகள், பல்வேறு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், ரஜினி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

இந்நிலையில், 2021-ம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர வைக்க வேண்டும் என்பதால் திமுகவின் தேர்தல் ஆலோசகராக ஐபேக் நிறுவனத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதுவரை பிரசாந்த் கிஷோர் வெளியில் வராமல் மறைமுகமாக தேர்தல் வியூகங்ளை வகுத்து வந்தார். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.