திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !
சமீப காலமாக ஆளுநரின் சில பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக ஆளும் திமுக தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி - தமிழ்நாடு திமுக அரசு இடையிலான மோதல் மீண்டும் எழும்ப தொடங்கி உள்ளது. ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள், தமிழ்நாடு வரலாறுக்கு எதிராக அவர் சொல்லும் கருத்துக்கள் சில திமுகவை கடுமையாக அப்செட் ஆக்கி உள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நீட் மசோதாவை டெல்லிக்கு அனுப்பிய ஆளுநர் ரவி - திமுக அரசு இடையிலான மோதல் கொஞ்சம் குறைந்தது.
மேலும் செய்திகளுக்கு..உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ..! சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க
ஆனால் சமீப காலமாக ஆளுநரின் சில பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக ஆளும் திமுக தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது. துணைவேந்தர்கள் நியமனம் முதல் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு வரை என பல்வேறு சர்ச்சைகள் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான அதிமுக, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆளுநருக்கு எதிராக தற்போது குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்தி 30-12-21 அன்று சட்டவிளக்கங்களோடு மநீம விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதலளிக்க மறுத்து தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளார் ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு மதிப்பளித்து விரைவில் ஆளுநர் அவர்கள் இத்திருத்தத்திற்கு ஒப்புதலளிக்க வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.
மேலும் செய்திகளுக்கு..அமெரிக்க ஜனாதிபதிக்கே சவால் விட்ட அதிமுக.. அந்த ஒரு வார்த்தை “எடப்பாடியார்” தான் காரணம் !
நியமனமுறை ஆளுநர் தேவையில்லை என்றும், குடியரசுத் தலைவரைப்போல தேர்தல் முறையில் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென்ற கருத்தாக்கத்தை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மநீம முன்வைத்திருந்ததை நினைவுகூர்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையானது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !