உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ..! சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
அரசாங்கம் பெண் குழந்தைகளின் முன்னேற்றம், கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது சுகன்யா சம்ரிதி யோஜனா என்று கூறப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகும்.
இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தையின் பெற்றோர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது மிகப்பெரிய தொகை அவர்களுக்கு கிடைக்கும். சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும்.
மேலும் செய்திகளுக்கு..அமெரிக்க ஜனாதிபதிக்கே சவால் விட்ட அதிமுக.. அந்த ஒரு வார்த்தை “எடப்பாடியார்” தான் காரணம் !
பெண் குழந்தைகள் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். ஆனால் ஒரு பெண்ணிற்கு 18 வயதிற்கு மேல் திருமணமானாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதம். ஆனால் காலாண்டிற்கு ஒரு முறை மத்திய அரசால் இதன் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டும். எனவே முதலீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் கணிசமான லாபத்தைக்கொடுக்கும் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தை இந்தியாவில் எந்தவொரு அஞ்சல் அலுவலகம், பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகளின் மூலமாக இத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். இதற்கு முதலில் அருகில் உள்ள தபால் நிலையத்தில் கிடைக்கும் SSA 1என்ற படிவத்தை முதலில் நிரப்ப வேண்டும். இந்த படிவத்தில் குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் KYC தகவல் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
குழந்தை மற்றும் பெற்றோர்களின் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன், நிரப்பிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இக்கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்சமாக ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250 அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வைப்பு தொகை செலுத்தலாம்.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
திட்டத்தின் மதிப்பு தொகையில் 50% வைப்புத் தொகையைத் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதிர்வு காலமான 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் சேமிப்பு தொகையில் இருந்து 3 மடங்கு தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் ஆதார் அட்டையுடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டையை எடுத்துச் சென்று அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் மகளின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.
மேலும் செய்திகளுக்கு..சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?