காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றி பாஜகவை கதறவிடும் கொரோனா வைரஸ்... முதல்வர் கமல்நாத் நிம்மதி பெருமூச்சு..!
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2018-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், பாஜக 107 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
மத்திய பிரதேச சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2018-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், பாஜக 107 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
இதையும் படிங்க;- பேரழகியாய் வர்ணித்து பேராசிரியையுடன் உல்லாசம்... மோகம் தீர்ந்தவுடன் எஸ்கேப்பான பேராசியருக்கு கைக்காப்பு..!
இந்நிலையில், முதல்வர் கமல்நாத் மீது அதிருப்தியின் காரணமாக முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததால், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய, பாஜக தலைவர்கள் சிந்தியாவை தட்டி தூக்கினர். 6 அமைச்சர்கள் உள்ளிட்ட சிந்தியா ஆதரவாளர்களான, 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தனர். இதனால், கமல்நாத் ஆட்சி மெஜாரிட்டியை இழந்தது. இதனையடுத்து, ஜே.பி.நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.
இதையும் படிங்க;- நாளை திருமணம்... பார்ட்டி வைக்காத புதுமாப்பிள்ளை கொடூர கொலை... தென்காசியில் பதற்றம்..!
இதையடுத்து, முதல்வர் கமல்நாத் 6 அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், பாஜக பிடியில் உள்ள எம்எல்ஏக்களை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார். இந்நிலையில், ஆளுநர் லால்ஜி டாண்டன், சபாநாயகருக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை 16-ம் தேதி தொடங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கூட்டத்தொடரின் முதல் நாளில் தான் உரையாற்றிய உடன் முதல் நடவடிக்கையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். எனினும், அவை நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணம் காட்டி சபாநாயகர் மத்திய பிரதேச சட்டப்பேரவை வரும் 26-ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார். இதன் காரணமாக கமல்நாத் அரசு தற்காலிகமாக தப்பித்துள்ளது.