பேரழகியாய் வர்ணித்து பேராசிரியையுடன் உல்லாசம்... மோகம் தீர்ந்தவுடன் எஸ்கேப்பான பேராசியருக்கு கைக்காப்பு..!
தஞ்சாவூர் அருகே உள்ள பர்மா காலனி சாலையை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் சுமதி (28). தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அஸ்வின்ராஜ் (29). இருவரும் தஞ்சை அருகே உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
தஞ்சாவூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி பேராசிரியையிடம் உல்லாசமாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள பர்மா காலனி சாலையை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் சுமதி (28). தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அஸ்வின்ராஜ் (29). இருவரும் தஞ்சை அருகே உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, இருவரும் ஜோடியாக அடிக்கடி வெளியே சென்று வந்தனர். பின்னர், அஸ்வின் பெண் பேராசிரியையை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் பேராசிரியை அஸ்வினிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அஸ்வின் தந்தை செல்வராஜ் திருமணம் செய்துகொள் என்று தொந்தரவு செய்தால் கொலை செய்துவிடுவேன் என பேராசிரியை மிரட்டுள்ளார்.
இதனால், மனமுடைந்துபோன பேராசிரியை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது அஸ்வின்ராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அஸ்வின்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.