ஓபிஎஸ் அணிக்கு தாவுகிறாரா கே.பி.முனுசாமி? இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம் புறக்கணிப்பால் பரபரப்பு.!

இபிஎஸ் தன்னை கெளரவமாக நடத்தவில்லை. மேலும், இபிஎஸ் அண்மையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, அவரோடு எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகம் தான் சென்றார். கட்சியின் துணை பொதுச்செயலாளரான தன்னை அமித்ஷாவை சந்திக்க அழைத்து செல்லாமல் அமைப்பு செயலாளராக சி.வி.சண்முகத்தை அழைத்து சென்றதையும் கூறி புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

KP Munusamy boycotted the meeting chaired by Edappadi Palanisamy

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுமே ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க;-  நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்ல.. அதனால்தான் புலம்பல்.. ஸ்டாலினை பங்கம் செய்த ஜெயக்குமார்

KP Munusamy boycotted the meeting chaired by Edappadi Palanisamy

இந்நிலையில் அதிமுக யாருக்கு என்ற போட்டியின் காரணமாக நீதிமன்றத்தில் இரு தரப்பும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் தீர்ப்பானது இரு தரப்புக்கும் சாதகமாக மாறி மாறி வருகிறது. இதனையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 17, 20 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

KP Munusamy boycotted the meeting chaired by Edappadi Palanisamy

இந்நிலையில் தொடக்க விழா பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கட்சியை பலப்படுத்துவது குறித்தும், அமைப்பு ரீதியாக காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரித்த போது இபிஎஸ் தன்னை கெளரவமாக நடத்தவில்லை.

KP Munusamy boycotted the meeting chaired by Edappadi Palanisamy

மேலும், இபிஎஸ் அண்மையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, அவரோடு எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகம் தான் சென்றார். கட்சியின் துணை பொதுச்செயலாளரான தன்னை அமித்ஷாவை சந்திக்க அழைத்து செல்லாமல் அமைப்பு செயலாளராக சி.வி.சண்முகத்தை அழைத்து சென்றதையும் கூறி புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.வி.சண்முகத்துக்கு இபிஎஸ் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலே இந்த கூட்டத்தை கே.பி.முனுசாமி புறக்கணித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது கே.பி.முனுசாமி ஓபிஎஸ் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-   சொந்தக் கட்சியினரை பார்த்து பயப்படும் முதல்வர் ஸ்டாலின்.. எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios