Asianet News TamilAsianet News Tamil

சொந்தக் கட்சியினரை பார்த்து பயப்படும் முதல்வர் ஸ்டாலின்.. எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

லஞ்சம் வாங்குவதில் முதன்மையாக திமுக அரசாக உள்ளது. கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியில் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். 

CM Stalin who is scared of his own party... edappadi palanisamy  Speech
Author
First Published Oct 10, 2022, 7:12 PM IST

கண்ணை இமை காப்பது போல் மக்களை காத்தது அதிமுக அரசு. ஆனால், அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போடுகிறது. ஆட்சிக்கு வரும் போது ஒரு பேச்சு, வந்தவுடன் ஒரு பேச்சு என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில்;- அதிமுக வீழ்ந்துவிட்டது, அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சேர்த்து 40 இடங்களிலும் வெல்வோம் என்று சொல்கிறார். எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும், அதிமுகவை வீழ்த்துவதற்கு உங்களுக்கு சக்தி கிடையாது.

இதையும் படிங்க;- ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக

CM Stalin who is scared of his own party... edappadi palanisamy  Speech

லஞ்சம் வாங்குவதில் முதன்மையாக திமுக அரசாக உள்ளது. கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியில் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும். சரித்திர சாதனையைப் பெறுவோம். முதல்வர் ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது.

CM Stalin who is scared of his own party... edappadi palanisamy  Speech

திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காலையில் நான் கண்விழித்து பார்க்கும்போது, ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் எழுந்து பார்ப்பதாக கூறுகிறார். அப்படியென்றால், அவருடைய நிலைமை பரிதாபமாக இருக்கிறது. கண்விழிக்கும்போது அவரது கட்சிக்காரர்களைப் பார்த்து பயப்படும் நிலைக்கு முதல்வர் சென்றுவிட்டார் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- “அதிமுக பிளவு எப்படியும் பாஜகவுக்கு ப்ளஸ் தான்..” அதிமுக கதி அவ்ளோதான் ? பகீர் கிளப்பிய குருமூர்த்தி !

Follow Us:
Download App:
  • android
  • ios