“அதிமுக பிளவு எப்படியும் பாஜகவுக்கு ப்ளஸ் தான்..” அதிமுக கதி அவ்ளோதான் ? பகீர் கிளப்பிய குருமூர்த்தி !
‘அதிமுக 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஆலோசனை கேட்டது, அப்பொழுது நான் ஆலோசனை வழங்கினேன்.அன்று கேட்டார்கள், இன்று கேட்கவில்லை’ என்று கூறியுள்ளார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்த பிறகு சசிகலா டிடிவி தினகரனை ஓரம் கட்டி விட்டு ஓபிஎஸ் உடன் கைகோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி. பிறகு பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவரது ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சட்ட போராட்டங்கள் மூலம் அதிமுகவில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மாறி,மாறி இருவரின் ஆதரவாளர்களை நீக்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஆடிட்டரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க..‘மயிலாப்பூரில் சுண்டைக்காய் விலை கேட்டா தீர்வு வராது’ - நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த ப.சிதம்பரம்
அப்போது பேசிய அவர், ‘திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அக்கட்சியின் பொதுக்குழுவில் பேசியது அவர் மனதில் வேதனை இருப்பதை காட்டுகிறது. அவர் தூக்கமில்லாமல் இருப்பதை காட்டுகிறது. ஆனால் அதற்கு இவர் தான் காரணம் என்று சொல்லவில்லை. அவரது நிலை பரிதாபமாக உள்ளது. அவர் வலியுடன் இருப்பதை காட்டுகிறது. அதிமுக 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஆலோசனை கேட்டது, அப்பொழுது நான் ஆலோசனை வழங்கினேன்.
அன்று கேட்டார்கள், இன்று கேட்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக என்னிடம் ஆலோசனை கேட்பவர்களுக்கு ஆலோசனை தருவேன். பாஜக அதிமுகவை பிளவு படுத்தாது. ஆனால் அதிமுக பிளவால் பாஜக வளர்ச்சி பெறும். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இருக்கும். அதிமுக தொடர்ந்து இதே போல் இருந்தால் அது சின்ன கட்சியாக மாறிவிடும். அதிமுகவின் அடையாளமாக எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இருந்தால் அதிமுக சின்னக்கட்சி ஆக மாறிவிடும்’என்று கூறினார்.
இதையும் படிங்க..‘இபிஎஸ் செய்த 41 ஆயிரம் கோடி ஊழல்.. ஓபிஎஸ் கையெழுத்து போடுவார் !’ அதிமுக பிரமுகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்