“திமுகவில் ஆ.ராசா முதல்வராக முடியுமா ? திமுகவை அட்டாக் செய்த வானதி சீனிவாசன் !”
பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் , தமிழக முழுவதும் நடைபெற்று வரும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் குறித்தும், ஆ.ராசா குறித்தும் இந்து முன்னணி கூட்டத்தில் இழிவாக பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..‘சட்ட ஒழுங்கு சீர்கேடு : முதல்வர் தான் காரணம்.. அவங்க கூட ஸ்டாலின் கூட்டு’ - கடுப்பான அர்ஜுன் சம்பத்.!
இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் , தமிழக முழுவதும் நடைபெற்று வரும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டித்தும் இன்று மாலை கோவை சிவானந்தா காலனியில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்டார் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். அப்போது பேசிய அவர், ‘பாஜகவினர் சாதிக்கு எதிரானவர்கள். இந்து சமுதாயத்தில் தீய பழக்கம், மூட நம்பிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் போராடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ராமனுஜர் குறிப்பிடத்தக்கவர்.
இதையும் படிங்க..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?
எல்.முருகனை மாநிலத்தலைவராகவும், பின் மத்திய அமைச்சராகவும் ஆக்கி, அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. திமுகவில் முதல்வர் நாற்காலியில் ஆ.ராசா உட்கார முடியாது. இதுதான் அவர்களின் சமூக நீதி. மதமாற்றத்திற்கு எதிராக மத மாற்றம் தவறானது என டாக்டர் அம்பேத்கர் சொன்னதை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியுமா ? கோவை மாநகரத்தில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஆட்சியர் அனைத்து கட்சி கூட்டம் போட்டார்.
ஆனால் திமுகவினர் ஒட்டிய போஸ்டருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர், சட்ட விரோதமாக திமுகவினர் வைத்திருக்கக்கூடிய பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியுமா ? என அடுக்கடுக்காக திமுக மீது குற்றச்சாட்டுகளை வைத்தார் வானதி சீனிவாசன்.
இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?