Asianet News TamilAsianet News Tamil

தமிழகம் முழுவதும் கருணாநிதிக்கு சிலை... அரசு அனுமதியுடன் அமைக்க மு.க. ஸ்டாலின் உறுதி!

கருணாநிதியின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அவர் இறந்த பிறகும் 6 அடி இடத்துக்காக போராடிதானே தற்போது மெரினா கடற்கரையில் கருணாநிதி ஓய்வு எடுத்துவருகிறார். தமிழக மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்த தலைவர், 5 முறை முதல்வராக இருந்தவருக்கு 6 அடி நிலம் கொடுக்க ஆட்சியாளர்கள் மறுத்தார்கள். 
 

Karunanidhi statue will be setup in whole tamil nadu - says stalin
Author
Erode, First Published Sep 23, 2019, 9:51 AM IST

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியுடன் முறைப்படி கருணாநிதி சிலைகள் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.Karunanidhi statue will be setup in whole tamil nadu - says stalin
முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா ஈரோட்டில் நடைபெற்றது. சிலையைத் திறந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். “அண்ணா அறிவாலயத்தை அடுத்து அவரது குருகுலமான ஈரோட்டிலும், அடுத்ததாக காஞ்சிபுரத்திலும் சிலைகள் கருணாநிதி சிலைகள் திறக்கப்பட்டன. பிறகு திருச்சியிலும் முரசொலி வளாகத்திலும் தலைவரின் சிலை திறக்கப்பட்டது. ஈரோட்டில் 2-வது முறையாக சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியுடன் முறைப்படி கருணாநிதி சிலைகள் அமைக்கப்படும்.Karunanidhi statue will be setup in whole tamil nadu - says stalin
கருணாநிதியின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அவர் இறந்த பிறகும் 6 அடி இடத்துக்காக போராடிதானே தற்போது மெரினா கடற்கரையில் கருணாநிதி ஓய்வு எடுத்துவருகிறார். தமிழக மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்த தலைவர், 5 முறை முதல்வராக இருந்தவருக்கு 6 அடி நிலம் கொடுக்க ஆட்சியாளர்கள் மறுத்தார்கள். Karunanidhi statue will be setup in whole tamil nadu - says stalin
 நீதிமன்றம் சென்றுதான் அந்த இடத்தைப் பெற்றோம். வாழ்ந்த காலத்திலும், வாழ்ந்த பின்னரும் போராட்ட களத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர் கருணாநிதி. நம் தலைவரை இழந்த பிறகு பல்துறையைச் சேர்ந்தவர்களை வைத்து புகழ் அஞ்சலி செலுத்தினோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய பெயரில் ஆட்சி நடத்துகிறவர்கள் ஒரு புகழ் அஞ்சலி கூட்டமாவது நடத்தினார்களா?” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios