Kamal : ஒடுக்கப்பட்டோருக்கான ஒலி..முரசறைந்த கலைஞரை நினைவு கூர்வோம் - கமல் ஹாசன் ட்வீட் !
Kalaignar Karunanidhi birthday :முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தான் கால்பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு தன் முத்திரையைப் பதித்தவர் கலைஞர் கருணாநிதி.
80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்க்கைக்கும் சொந்தமானவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மநீம கட்சி தலைவரும் ,நடிகருமான கமல் ஹாசன் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல் ஹாசன்
அதில், ‘எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.’ எனத் தெரிவித்துள்ளார். இவரது ட்வீட் இவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : HBD Kalaignar Karunanidhi : தமிழக்தின் திராவிட மாடலுக்கு 99வது பிறந்தநாள் இன்று !!
இதையும் படிங்க : HBD Kalaignar Karunanidhi : “தமிழுக்கு அகவை 99” - அறிவாலயம் முதல் முரசொலி வரை முதல்வர் ஸ்டாலின் மரியாதை !