Asianet News TamilAsianet News Tamil

HBD Kalaignar Karunanidhi : தமிழக்தின் திராவிட மாடலுக்கு 99வது பிறந்தநாள் இன்று !!

Kalaignar Karunanidhi birthday : மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Today is the 99th birthday of the former DMK leader and former Tamil Nadu Chief Minister Karunanidhi
Author
First Published Jun 3, 2022, 7:40 AM IST

கலைஞர் கருணாநிதி

மேலும் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தான் கால்பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு தன் முத்திரையைப் பதித்தவர் கலைஞர் கருணாநிதி.  80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்க்கைக்கும் சொந்தமானவர் அவர். உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டுக் காலம் அசைக்கமுடியாத ஜனநாயகத் தலைவராக வலம் வந்தவர்.  

Today is the 99th birthday of the former DMK leader and former Tamil Nadu Chief Minister Karunanidhi

அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் தலைப்புச் செய்தியாக இருந்தவர். 5 முறை முதல்-அமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை-எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல சமூக நலத்திட்டங்களை திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர். 

 திராவிட மாடலுக்கு 99வது பிறந்தநாள்

இந்தியாவிற்கே முன்னோடியாய் சமூகநீதி காத்து சமத்துவபுரம் அமைத்த சமுதாயக் காவலர்.போட்டியிட்ட அனைத்து  தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பரிசாக பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் இனி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது.  

Today is the 99th birthday of the former DMK leader and former Tamil Nadu Chief Minister Karunanidhi

கலைஞரின்  98ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது  திருவுருவச்சிலைக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.  இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாள் திமுகவினரால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க : திமுக அரசின் ஊழல் ஆதாரங்கள் வெளியிடப்படும்.. அதிர்ச்சியில் திமுக.! பயமுறுத்தும் அண்ணாமலை!

இதையும் படிங்க : BJP : அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை - பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு !

Follow Us:
Download App:
  • android
  • ios