HBD Kalaignar Karunanidhi : “தமிழுக்கு அகவை 99” - அறிவாலயம் முதல் முரசொலி வரை முதல்வர் ஸ்டாலின் மரியாதை !
Kalaignar Karunanidhi birthday : மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தான் கால்பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு தன் முத்திரையைப் பதித்தவர் கலைஞர் கருணாநிதி. கலைஞரின் 98ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாள் திமுகவினரால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலைஞர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணா அறிவாலயத்தை தொடர்ந்து முரசொலி அலுவலகத்திலும், கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் நினைவிடத்தில் சிறப்பான மலர் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. 'தமிழுக்கு அகவை 99' என்று பூக்கவில்னல அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : HBD Kalaignar Karunanidhi : தமிழக்தின் திராவிட மாடலுக்கு 99வது பிறந்தநாள் இன்று !!
இதையும் படிங்க : Vikram Movie Review : ஆண்டவர் ஆட்டம் வொர்த்தா?... வொர்த் இல்லையா? - விக்ரம் படத்தின் டுவிட்டர் விமர்சனம்