மகளிர் உரிமை தொகைக்கு இது கட்டாயம்.! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்.!

அனைத்து நியாய விலை கடைகளிலும், கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்; திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்.

kalaignar magalir urimai thogai...Fingerprint registration is mandatory

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. 

வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்ற அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இதையும் படிங்க;- ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு அரசாணை - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

kalaignar magalir urimai thogai...Fingerprint registration is mandatory

அதன்படி மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என  தமிழ்நாடு  அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க;- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரேஷன் கடைகளில் தன்னார்வலர்கள்!

kalaignar magalir urimai thogai...Fingerprint registration is mandatory

இதுதொடர்பாக அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- அனைத்து நியாய விலை கடைகளிலும், கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்; திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம். ஜூலை 17ம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios