ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு அரசாணை - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களின் வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கிகரிக்கும் வகையில் அனைத்து பெண்களுக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக தேர்தல் அறிக்கையில், அந்த அம்சம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது. தேர்தல் பிரச்சாரத்திலும் அந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது.
16 இலட்சம் மதிப்பிலான காரை வாங்கிய பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா.. யார் வாங்கி கொடுத்தா தெரியுமா?
இந்தநிலையில், இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டுமே ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் சேகரிக்க சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமை தொகை திட்டத்திற்கான அரசாணையை இப்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
திட்டச் செயலாக்கம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 7000 கோடி நிர்வாக அனுமதி வழங்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் செப். 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்