Asianet News TamilAsianet News Tamil

16 இலட்சம் மதிப்பிலான காரை வாங்கிய பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா.. யார் வாங்கி கொடுத்தா தெரியுமா?

16 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மகேந்திரா மரோசா காரை டெலிவரி எடுத்துள்ளார் பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா.

Marazzo car given by Kamal to Coimbatore female driver Sharmila
Author
First Published Jul 10, 2023, 4:28 PM IST

கோவையின்  முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான ஷர்மிளாவிற்கு  அனைத்து தரப்பினரும்   வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். மேலும் அவர் ஓட்டிய பேருந்தில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர்  வானதி சீனிவாசன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பயணம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  அந்நிலையில் கனிமொழி பயணம் செய்த ஒரு மணி நேரத்தில் தன்னைப்பேருந்து உரிமையாளர் வேலையை விட்டு நீக்கியதாகத் தெரிவித்த ஷர்மிளா, பேருந்து ஓட்டுநர் பணியை விட்டுவிட்டு கால் டாக்ஸி ஓட்டப்போவதாக தெரிவித்தார்.

Marazzo car given by Kamal to Coimbatore female driver Sharmila

இந்த நிலையில் கடந்த வாரம்  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் ஷர்மிளா சந்தித்தார். அப்போது வாடகை கார் வாங்குவதற்காக மக்கள் நீதி மய்யம் பண உதவி செய்யும் என கமலஹாசன் தெரிவித்தார். அதற்கான முதல் கட்ட காசோலையை ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் வழங்கினார். மேலும் புதிய கார் புக் செய்தவுடன் மீதித்தொகை வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல கார் சோரூமில் ஷர்மிளா பெயரில் 16 இலட்சம்  மதிப்பலான மகேந்திரா மரோசா கார் புக் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர்  புதிய காருக்கான சாவியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் ஷர்மிளாவிடம் வழங்கினார். தொடர்ந்து  சனிக்கிழமை கோவை அவிநாசி சாலையில் உள்ள கார் ஷோரூமில் சனிக்கிழமை ஷர்மிளா தனது புது காரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் சென்று  டெலிவரி எடுத்துள்ளார். இது தொடர்பான போட்டோ, வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

Follow Us:
Download App:
  • android
  • ios