நமது அம்மா நாளிதழிலுக்கு வந்த விளம்பர பணத்தை ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் மோசடி செய்த்தாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

கொடநாடு இபிஎஸ் மவுனம் ஏன்?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் மீதும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மீதும் பரபரப்பு புகார் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்ட நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது பொறுப்பில் இருந்து விவலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கவிதை நடையிலான டுவிட்டர் பதிவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்? முதலமைச்சராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமி கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய போதிய அக்கறை காட்டவில்லை. கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாஜக முக்கியத்துவம் கொடுப்பது ஓபிஎஸ்க்கா..? இபிஎஸ்க்கா..?மாநில செயலாளர் பேச்சால் பரபரப்பு

கட்சிக்கும் மருது அழகுராஜ் என்ன தொடர்பு..?

மேலும் கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது. எதோ ஒரு நோக்கத்தோடு அதிமுக பொதுக்குழுவில் ஆட்கள் திரட்டப்பட்டிருந்தனர். நிர்வாகிகளுக்கு பின்னால் அமர வைக்கப்பட்டிருந்த சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை நாகூசும் வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தனர். பொதுக்குழுவில் திட்டமிட்டு திரைக்கதை எழுதி ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். இது போன்ற குற்றச்சாட்டு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். கூலிக்கு மாரடிக்கும் வேலையைத்தான் மருத அழகுராஜ் செய்துகொண்டு உள்ளார் கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. கட்சிக்காக தியாகம் செய்துள்ளாரா?ஜெயிலுக்கு சென்றிருக்காரா? என கேள்வி எழுப்பியுள்ளார். எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் விசுவாசம் கொண்டவரா என்றால் அதுவும் இல்லையென தெரிவித்தார்.

பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் தேதி..? ஓபிஎஸ்க்கு டுவிஸ்ட் வைத்த இபிஎஸ்

விளம்பர பணத்தை ஆட்டை போட்டவர்

மருது அழகுராஜின் ஒரே நோக்கம் கூலிக்கு மாரடிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டுள்ளார். மருது அழகுராஜ் சர்வ கட்சி தலைவர் அவர்போகாத கட்சியே இல்லையென தெரிவித்தார். நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் பொறுப்பாசிரியராக இருந்தபோது அங்கேயும் நிதி கையாடல் முறைகேட்டில் மருது அழகுராஜ் ஈடுபட்டார். நமது அம்மாவை இணைந்த பின் ஒழுங்காக இருந்திருக்கலாம் அங்கேயும் நிதி முறைகேட்டில் மருது அழகுராஜ் ஈடுபட்டார். நமது அம்மா பத்திரிக்கை விளம்பர வருமானங்களை கணக்கில் வராமல் முழுமையாக எடுத்துக் கொண்டுள்ளார். பாமக நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்தார் அதற்கான விளம்பரம் நமது அம்மா நாளிதழில் வந்தது. விளம்பர பணம் 60 ஆயிரம் ரூபாய் அது கணக்கில் வரவில்லை முழுமையாக பணத்தை மருந்து அழகுராஜ் எடுத்துக் கொண்டார்.
இதன் காரணமாக நமது அம்மாவில் இருந்து விலகி வைக்கப்பட்டவர்.

குற்றவாளியை கண்டுபிடிக்க ஆர்வம் இல்லை... கோடநாடு வழக்கு பற்றி முன்னாள் அதிமுக நிர்வாகி பரபரப்பு கருத்து!!

பொதுக்குழு உறுப்பினர்கள் மீது அவதூறு

தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து கொண்டு கட்சியின் மீது கலங்கத்தை சுமத்துக் கொண்டு வருகிறார் என குற்றம்சாட்டினார். பொதுக்குழுவில் அடையாள அட்டை இல்லாமல் யாரும் உள்ளே செல்ல முடியாது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஏறக்குறைய 95 சதவீத உறுப்பினர்களுக்கு மேலே உள்ளவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் அசிங்கப்படுத்தும் வகையில் சேற்றை வாரி வீசும் வகையில் மருது அழகுராஜ் பேசியுள்ளார்.