பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் தேதி..? ஓபிஎஸ்க்கு டுவிஸ்ட் வைத்த இபிஎஸ்

அதிமுகவில் இடைக்கால பொது செயலாளர் பொறுப்பு வரும் 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படவுள்ளது. அதன்படி இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளார். 
 

It has been reported that the date of election for the post of AIADMK General Secretary will be announced in the General body meeting

திட்டமிட்டபடி பொதுக்குழு

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி அக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் பொதுசெயலாளர் பதவி உருவாக்குவதற்கான தீர்மானம் இல்லாததால் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நிரந்தர அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதோடு, மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.பொதுக்குழுவுக்கு தடை பெற ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கான அழைப்பிதழை தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் அனுப்பி, கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த இ.பி.எஸ் தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

25 லட்சம் முதல் 5 கோடி பணம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பயம் தெரியுமா? பொளந்து கட்டிய டிடிவி தினகரன்

It has been reported that the date of election for the post of AIADMK General Secretary will be announced in the General body meeting

16 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டம்

11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, கழக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவி அம்மா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல், கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல், கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுப்பது தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.

பொதுக்குழு உறுப்பினர்கள் பணம் வாங்கினார்களா.? வைத்தியலிங்கம்,டிடிவிக்கு எச்சரிக்கை விடுத்த கே.பி.முனுசாமி

It has been reported that the date of election for the post of AIADMK General Secretary will be announced in the General body meeting


பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல்

மேலும் கழக இடைக்கால பொது செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல் கழக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வதுஉள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில், பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் காலை 9:15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு வர வேண்டும் எனவும், கொரோனா நெறிமுறைகளை  கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுச்செயலாளர் தேர்தலில் அதிமுக சட்ட விதிகள் மாற்ற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக சட்ட விதிகளில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என இபிஎஸ் தரப்பு கூறிவருகிறது. 

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுவேன்..! முன்னாள் அமைச்சர் பேச்சால் திடீர் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios