பாஜக முக்கியத்துவம் கொடுப்பது ஓபிஎஸ்க்கா..? இபிஎஸ்க்கா..?மாநில செயலாளர் பேச்சால் பரபரப்பு

அதிமுகவில் இபிஎஸ்ஆ ஓபிஎஸ் ஆ என கேள்வி எழுந்துள்ள நிலையில் பாஜகவில் எப்போதும் ஐபிஎஸ் தான் என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

State Secretary Srinivasan has said that BJP will not interfere in AIADMK leadership issue

பாஜகவில் ஓபிஎஸ்.?

பாரதிய ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு பிரிவு சார்பில் 100வது ஆண்டு பன்னாட்டு கூட்டுறவு தின விழா மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில கூட்டுறவு பிரிவு தலைவருமான மாணிக்கம் தலைமையில், பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் மாணிக்கம் பேசுகையில், கூட்டுறவு திட்டங்களுக்கு நபார்டு வங்கி மூலம் மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக மாயை ஏற்படுத்தி தவறான செய்தியை வெளியிடுவதாக கூறினார்.

தம் அடிப்பது போன்று இந்து கடவுள் காளியை இழிவுப்படுத்திய லீனா மணிமேகலையை தூக்கி உள்ள போடுங்க.. H.ராஜா ஆவேசம்.!
 

State Secretary Srinivasan has said that BJP will not interfere in AIADMK leadership issue

ஓபிஎஸ்-இபிஎஸ்..?

நியாயவிலைக்கடைகளால் மத்திய அரசு வழங்கும் 5 கிலோ அரிசியை தாங்கள் சொந்த நிதியை செலவழித்து வழங்குவது போல மாநில அரசு பொய் கூறுகின்றனர். விரைவில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் வரும் என தெரிவித்தார். .ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைந்து கொள்வாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக ஒரு ஜனநாயக கட்சி. யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள் என தெரிவித்தார். ஓபிஎஸ் தன்னை நம்பி வந்தவர்களுக்கு எதுவும் செய்ததில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, எதிர்பார்ப்போடு இருந்தவர்கள் தான் ஏமாந்து இருப்பார்கள். நான் எந்த எதிர்ப்பார்ப்போடும் அதிமுகவில் இருக்கவில்லையென தெரிவித்தார் 

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடியை கைது செய்யுங்க.. திடீர் போராட்டம்.. இபிஎஸ் அதிர்ச்சி!

State Secretary Srinivasan has said that BJP will not interfere in AIADMK leadership issue

அதனைத்தொடர்ந்து பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் பேசுகையில், சட்டமன்ற தீர்மானங்கள் குறித்து மாநில அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு அளித்த எந்த நோட்டீஸ்க்கும் மாநில அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லையென தெரிவித்தார். பாஜக ஈபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம் தருகிறதா என்ற கேள்விக்கு, பாஜகவில் ஐபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம். பாஜகவை அண்ணாமலை திறம்பட வழிநடத்தி வருகிறார் என தெரிவித்தார்.  அதிமுக எங்கள் கூட்டணி கட்சி. அதிமுகவில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது.கூட்டுறவு துறையில் தவறுகள் நடந்தால் அதை பாஜக தட்டிக்கேட்கும். தமிழகத்தில் கூட்டுறவு இயக்கம் தோல்வியடைந்து விட்டது. தமிழகத்தில் நடைபெறும் எல்லா தவறுகளுக்கும் முன் ஒரு திமுககாரன் இருப்பான். கூட்டுறவில் சுண்டல், அரிசி, பருப்பு என்னனென்ன உள்ளதோ எல்லாவற்றையும் திருடுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்கள்

பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் தேதி..? ஓபிஎஸ்க்கு டுவிஸ்ட் வைத்த இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios