Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைத்தின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.

Jayalalitha death inquiry report cm stalin discuss with cabinet
Author
First Published Aug 29, 2022, 10:25 PM IST

தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம், ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டது. 

Jayalalitha death inquiry report cm stalin discuss with cabinet

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?

ஒன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஆகும். இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 17 காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் அதற்கான விபர அறிக்கை மற்றும் ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இரண்டாவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைத்தின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Jayalalitha death inquiry report cm stalin discuss with cabinet

அதேபோல ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆணைய பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைதள சூதாட்டங்களை தடை செய்ய அவரச சட்டம் வகுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

தடை சட்டங்கள் குறித்து நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையிலும் பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களிடம் இருந்து வரப்பெற்றுள்ள ஆலோசனைகளை கருத்தில் கொண்டும் இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்ட வரைவினை வகுத்தல் குறித்தும் அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!

 

Follow Us:
Download App:
  • android
  • ios