கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் மரத்தில் மோதியதால் ஏற்பட்ட காயங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது. பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதற்கு மறுநாளான ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது.
மேலும் பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது. மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக்குழு தாக்கல் செய்தது. ஶ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கையையும் கடந்த 1ம் தேதி ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு அளிக்கப்பட்டது. முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, பின்னர் இந்திய தண்டனை சட்டத்தின் மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு, போக்சோ சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை சேர்த்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
12ஆம் வகுப்பு என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால், குடும்ப சூழ்நிலை குறித்து சிந்திக்காமல், தன் மனதை படிப்பில் செலுத்தி நன்றாக பிள்ளைகள் படிப்பார்கள் என்று பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை உறைவிட பள்ளியில் சேர்க்கின்றனர் என உத்தரவில் பதிவு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், வெளியிட்ட உத்தரவில் தற்போது சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, இரண்டு முறை செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் தமிழக மருத்துவ குழு எடுத்த முடிவுகளை நீதிமன்றம் நியமித்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு ஏற்றுக்கொள்வதாக அதன் அறிக்கையிலிருந்து தெரியவருகிறது. எனவே மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாவதாகவும், அவ்வாறு பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு மாறாக மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் உடலில் இருந்ததாக அறிக்கைகளில் இருந்து தெரிய வருவதாகவும், குறிப்பிட்டுள்ளார். பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல என்றும், வண்ணப்பூச்சு என என நிபுணர்களின் அறிக்கை கூறுவதாகவும் நீதிபதி தன் உத்ததவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில், வேதியியல் பாடம் படிப்பதில் உயிரிழந்த மாணவி சிரமப்பட்டு இருந்தது உறுதியாகி உள்ளதாகவும், அதே சமயம் இரு ஆசிரியைகள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்குப் பதிவு செய்ததும் தவறு என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்' என்று சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கற்பழிப்பு மற்றும் கொலையின் கீழ் குற்றத்தை ஈர்ப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்வது துரதிர்ஷ்டவசமானதும் வருந்தத்தக்கதுமான நிலை.
மாணவர்களை நன்றாகப் படிக்குமாறு அறிவுறுத்தியதற்காக மனுதாரர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. தற்கொலைக்கு தூண்டியதாகக் கூட எந்த ஆதாரமும் இல்லை. மேலும், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை நன்றாகப் படிக்கக் கூறுவது, வழி நடத்துவது ஆகியவை கற்பித்தலின் ஒரு பகுதியாகும். இது தற்கொலைக்கு தூண்டுவதாக அமையாது. எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 305வது பிரிவின் கீழ் குற்ற நடவடிக்கைகள் மனுதாரர்களுக்கு எதிரானதாக அமையவில்லை' என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?