வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?
வங்கியில் உங்களது கணக்கில் பணம் இல்லையா. கவலையை விடுங்கள். பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்.
மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை 2014-ல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கி வசதிகளை வழங்க மத்திய அரசு முடிவு நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் , பூஜ்ஜிய வைப்புத் தொகையில் வங்கிக் கணக்கு திறக்கலாம். இந்தக் கணக்கைத் திறக்கும்போது, பல வகையான வசதிகளைப் பெறலாம்.
மேலும் செய்திகளுக்கு..நிதியே இல்ல.. இதுல 80 கோடிக்கு பேனா அவசியமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், அதில் ஓவர் டிராஃப்ட் வசதி இருக்கிறது. எந்தவொரு வாடிக்கையாளரும் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தலாம், ஆனால் இதற்காக வங்கி மேலாளரிடம் பேச வேண்டும். ஓவர் டிராஃப்ட் வசதி என்பது ஒரு வகை கடன். வங்கி உங்களுக்கு அனுமதி அளித்தால், உங்கள் பெயரில் 10,000 ரூபாய் எளிதாக பெறலாம். ஆனால் இதற்கு தினசரி வட்டி கட்ட வேண்டும். இது தவிர, ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற உங்கள் ஜன்தன் கணக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் பழமையானதாக இருக்க வேண்டும்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவை. இதில், 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கலாம். கணக்கைத் தொடங்குபவர்களுக்கும் ரூபே டெபிட் கார்டு கிடைக்கும். அதே நேரத்தில், ஏடிஎம் கார்டில் 2 லட்சம் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும். இதனுடன், 30,000 ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.
மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை !!
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை 46.25 கோடி பயனாளிகளின் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மார்ச் 2015ல் இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு திறந்தவர்களின் எண்ணிக்கை 14.72 கோடியாக இருந்தது. அதே நேரத்தில், இது ஆகஸ்ட் 10, 2022க்குள் 46.25 கோடியாக அதிகரித்து, மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இதில் 56 சதவீத கணக்குகள் பெண்களுடையது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 31.94 கோடி ரூபாய், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !