Asianet News TamilAsianet News Tamil

அறநிலையத்துறை தூங்குகிறதா.?? வேலையே செய்யாமல் அதிகாரிகள் சம்பளம்.. தலையில் அடித்துக் கொண்ட உயர்நீதி மன்றம்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இந்து சமய அறநிலைத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

Is the charitable department sleeping. ?? Officers' salaries without doing work .. High Court  Order.
Author
Chennai, First Published Jun 28, 2022, 2:45 PM IST

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இந்து சமய அறநிலைத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் மீட்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறி வரும் நிலையில் இவ்வாறு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரியில் உள்ள அருள்மிகு காலதீஷ்வரர் கோயிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி  சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை  இந்து சமய அறநிலைத்துறை அமல்படுத்தவில்லை எனக்கூறிய சீனிவாசன் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்:  ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் பதவியா? மத்திய அரசு கொடுத்த ஆஃபர்..!

Is the charitable department sleeping. ?? Officers' salaries without doing work .. High Court  Order.

அப்போது உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் தொடர்பாக 18 இடங்களில் இருந்த  ஆக்கிரமிப்பு களில் 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மீதம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும் என கோரினர் .தற்போதைய தமிழகத்தில் இந்து சமய துறை சார்பில் 1,100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்,  இதை அடுத்து கருத்து கூறிய நீதிபதிகள் கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதை தடுக்க வேண்டியது இந்து சமய அறநிலைத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது என கண்டனம் தெரிவித்தனர்.

கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாக தொடர்ந்து வழக்குகள்  தாக்கலாகி வருகிறது, இதை ஆரம்பத்திலேயே இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தடுக்க வேண்டுமல்லவா. ஆனால் அவர்கள் சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.  கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்படும் வரை அதிகாரிகள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு அதன் மீது உத்தரவு போட்ட பிறகு அதிகாரிகள் அதன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

இதையும் படியுங்கள்: எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவர் கண்டித்ததால் மனைவி என்ன செய்தார் தெரியுமா?

Is the charitable department sleeping. ?? Officers' salaries without doing work .. High Court  Order.

மேலும் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு  கோவில்கள்  முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதற்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சரியாக செயல்படாததே காரணம் என்றனர். 50 ஆண்டு காலமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இப்போது வந்து கடந்த ஒரு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். கோவில் நிலங்களில் குத்தகை மூலம் வருமானம்  வருவதனால், இந்து சமய அறநிலையத் துறைக்கு பயன் என்பதால்தான் கோவில் நிலங்களை குத்தகைக்கு விட நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என  கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மூன்று வார காலத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios