ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் பதவியா? மத்திய அரசு கொடுத்த ஆஃபர்..!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு வருவதால் அவருக்கு ஆளுநர் பதவி வழங்க மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Excitement over the news that the governor is going to give the post to O Panneer Selvam

அதிமுகவில் குழப்பம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆட்சியிலும், கட்சியிலும்  பல வித குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வந்தார். இதனையடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றதும், முதலமைச்சராக திட்டமிட்டார். இதனால் ஏற்பட்ட மோதலால் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தர்மயுத்தம் மேற்கொண்டார். இதனையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணியுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என ஓபிஎஸ் கூறிய நிலையில் முதலமைச்சர் பதவியை விட்டு தர இபிஎஸ் மறுத்துவிட்டார். இதனையடுத்து பிரதமர் மோடி இரு தரப்பையும் சமாதானமாக இருக்கும்படி கூறி ஓபிஎஸ்க்கு துனை முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

அதிமுகவை வழி நடத்த உண்மையில் யாருக்கு உரிமை.? 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். எழுதி வைத்த உயிலில் தீர்வு.!

Excitement over the news that the governor is going to give the post to O Panneer Selvam

டெல்லி சென்ற ஓபிஎஸ்

இந்த முடிவின் படி ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்த ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இந்தநிலையில் இரட்டை தலைமையால் தான் தோல்வி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஒற்றை தலைமை கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகள் 95% பேர் ஒற்றை தலைமையாக எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்தநிலையில்  குடியரசு தலைவர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள  டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமர் மோடி சந்திக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பிரதமர் மோடியையும், அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரம்... அதிமுகவுக்கு இவர்தான் சரியாக இருப்பார்... விஜயபாஸ்கர் பரபரப்பு கருத்து!!

ஓபிஎஸ் முகத்தை டாராக கிழித்து எடப்பாடி ஆதரவாளர்கள் அட்ராசிட்டி.. அலறி அடித்து புது பேனர் வைத்த தலைமை கழகம்...

Excitement over the news that the governor is going to give the post to O Panneer Selvam

ஓபிஎஸ்க்கு ஆளுநர் பதவியா?

இந்தநிலையில் ஓபிஎஸ்க்கு ஆளுநர் பதவி தர தயாராக இருப்பதாக  பாஜகவின் மூத்த நிர்வாகிகள் அவரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா, மேகலயா மாநிலங்களில் ஆளுநர் பொறுப்பு காலியாக இருப்பதால் அந்த இடங்களுக்கு தங்களை ஆளுநராக நியமிக்கலாம் என கூறியுள்ளனர். ஆனால் இந்த ஆஃபரை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது. தனக்கு அதிமுகவில் அதிகளவு செல்வாக்கு இருப்பதாகவும் எனவே ஆளுநர் பதவி என்ற வாக்குறுதியை மறுத்திவிட்டதாக செய்திகள் கூறுகிறது. இந்த செய்தி உண்மையா? அல்லது சிலரால் பரபரப்பிவிடும் பொய் செய்தியா என்பதை விரைவில் தெரியவரும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios