Asianet News TamilAsianet News Tamil

ஒற்றைத் தலைமை விவகாரம்... அதிமுகவுக்கு இவர்தான் சரியாக இருப்பார்... விஜயபாஸ்கர் பரபரப்பு கருத்து!!

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் அந்த ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிசாமி தான் உள்ளார் என்றும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

vijayabaskar explains about admk controversy and ops eps clash
Author
Pudukkottai, First Published Jun 27, 2022, 10:23 PM IST

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் அந்த ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிசாமி தான் உள்ளார் என்றும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்த நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் முகத்தை டாராக கிழித்து எடப்பாடி ஆதரவாளர்கள் அட்ராசிட்டி.. அலறி அடித்து புது பேனர் வைத்த தலைமை கழகம்...

vijayabaskar explains about admk controversy and ops eps clash

இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இந்த நிலையில் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டனின் விருப்பம் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கட்சி என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல, அதிமுக நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம். இன்றைக்கு மட்டுமல்ல முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் பல்வேறு கால கட்டங்களில் இது போன்ற சூழலை எதிர்கொண்ட இயக்கம்தான் அதிமுக. இந்த மகத்தான மக்கள் இயக்கம் இன்றைய இந்த சிறு பிரச்சனைகளை எல்லாம் தாண்டி வரும் காலத்தில் ஆளும் கட்சியாக வரும், இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் வேண்டியதில்லை.

இதையும் படிங்க: அதிமுகவை வழி நடத்த உண்மையில் யாருக்கு உரிமை.? 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். எழுதி வைத்த உயிலில் தீர்வு.!

vijayabaskar explains about admk controversy and ops eps clash

குறிப்பாக இந்த காலகட்டத்தில் 99 சதவீதத்திற்கும் மேலாக தொடர்ந்து மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் மற்றும் எல்லா இடங்களிலுமே அடிமட்ட தொண்டர்கள் வரை ஒற்றைத் தலைமை என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கின்றது. அந்த ஒற்றைத் தலைமை வலுவான ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம் எண்ணம். அந்த ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக உள்ளவர் எடப்பாடி பழனிசாமி  தான். அவர் ஒற்றை தலைமையை ஏற்கவேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் எங்கள் நலன் என்பதையும் தாண்டி கட்சி நலன் தான் ரொம்ப முக்கியம், இதை மனதில் வைக்கும் போது எல்லா விஷயத்திற்கும் நிறைவான தீர்வு கிடைக்கும், திட்டமிடப்பட்டபடி அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எல்லா விதமான கருத்து மாச்சிரியங்களுக்கும் அப்பாற்பட்டு அது ஜாதி மதத்திற்கும் அப்பாற்பட்டு மகத்தான மக்கள் இயக்கமாக தொடர்ந்து செயல்படும். இதில் எல்லா கருத்துகளுமே புரியும் வகையில் அடங்கியுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி  திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios