இடைத்தேர்தலில் ரூ.400 கோடி செலவு செய்த திமுக.. தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு விழா நடத்துங்கள்.. அசராத மேனகா.!

மக்களுக்கு கொடுத்த ரூ.20,000 பணமெல்லாம் டாஸ்மாக்குக்கு போய்விட்டது. பட்டியில் அடைத்து வைத்ததால் அவர்கள் வேலைக்கும் செல்லவில்லை. இனி கஷ்டப்படுவார்கள். எனவே தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக சொன்ன ரூ.5,000 மதிப்பிலான மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

Hold a felicitation ceremony for the Election Commission... menaka navaneethan

ஒவ்வொரு முறையும் புகார் அளித்தும் அப்படியா என கேட்ட தேர்தல் ஆணையத்துக்கு நிச்சயமாக பாராட்டு விழா நடத்தியே ஆகவேண்டும் என  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,922 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,432 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதன்படி, அதிமுகவை வேட்பாளர் தென்னரசுவை வீழ்த்தி ஈவிகேஎஸ் இளங்கோவன் 66, 575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க;- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி..! காரணம் இதுதான்

Hold a felicitation ceremony for the Election Commission... menaka navaneethan

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் பேட்டியளிக்கையில்;- மக்களின் வறுமையை மூலதனமாக பயன்படுத்துகிறது திமுக. ரூ.400 கோடி செலவு செய்திருக்கின்றனர். நாளை ரூ.4000 கோடி கொள்ளையடிக்கப் போகிறார்கள். 39 லட்சம் மட்டும் செலவு செய்து இந்த தேர்தலை சந்தித்து இருந்தால் திமுக கூட்டணி காங்கிரஸ் காணாமல் போய் இருக்கும். மக்களுக்கு கொடுத்த ரூ.20,000 பணமெல்லாம் டாஸ்மாக்குக்கு போய்விட்டது. பட்டியில் அடைத்து வைத்ததால் அவர்கள் வேலைக்கும் செல்லவில்லை. இனி கஷ்டப்படுவார்கள். எனவே தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக சொன்ன ரூ.5,000 மதிப்பிலான மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுத்துவிடுங்கள். 

இதையும் படிங்க;- ஆணவம் பிடித்த இபிஎஸ் என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் மட்டுமே அதிமுக வளரும்! பண்ருட்டி ராமச்சந்திரன் விளாசல்.!

Hold a felicitation ceremony for the Election Commission... menaka navaneethan

திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என பாராட்டு விழா நடத்துவார்கள். அதுகூடவே, தேர்தல் ஆணையத்துக்கு ஒரு பாராட்டு விழாவையும் கொண்டாடுங்கள். அவர்கள் இல்லை என்றால் இந்த வெற்றி சாத்தியமில்லை. ஒவ்வொரு முறையும் புகார் அளித்தும் அப்படியா என கேட்ட தேர்தல் ஆணையத்துக்கு நிச்சயமாக பாராட்டு விழா நடத்தியே ஆகவேண்டும் என  மேனகா நவநீதன் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios