மீண்டும் பரபரக்கும் குட்கா ஊழல் வழக்கு.. முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிபிஐ

குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் சிபிஐ அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

gudka corruption case... cbi asks permission to tamilnadu government

குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் சிபிஐ அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை செங்குன்றம் அருகேயுள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணா, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இவர்கள் பெயர்களுடன் வேறு சில போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால்துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.

இதையும் படிங்க;- அதிமுகவில் சாமானிய தொண்டனும் முதல் வரிசையில் அமரலாம்... அதற்கு நானே சாட்சி... ஆர்.பி. உதயகுமார் கருத்து!!

gudka corruption case... cbi asks permission to tamilnadu government

இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் விசாரித்தனர். பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணா, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த சம்பத் ஆகியோரின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர்.

gudka corruption case... cbi asks permission to tamilnadu government

அதன் பின்னர், குட்கா வியாபாரி மாதவராவ், பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயை பல மாநிலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 246 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கினர். இந்த அப்படியே கிடப்பில் இருந்து வந்த நிலையில் மீண்டும் குட்கா வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது. 

இதையும் படிங்க;-  OPS பதவி பறிப்பு! எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்! அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு முக்கிய பதவி

gudka corruption case... cbi asks permission to tamilnadu government

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்ட பிறகு முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios